Pages

Tuesday, December 18, 2012

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் 29-ல் உண்ணாவிரதம்

இருபது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் வரும் 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
ஊதியக்குழு முரண்பாட்டை களைய மூன்று நபர் குழு அறிக்கை வெளியிட வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200 என்பதை 9300 என மாற்றி வழங்கவேண்டும், நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படும் போது, தலைமை ஆசிரியரை பதவி இறக்கம் ஊதிய குறைப்பு செய்வதை தடுக்க உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.

போராட்டம் குறித்த ஆயுத்த கூட்டம் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் கே.பாஸ்கர் தலைமை தாங்கினார். வட்டச் செயலர் பாலுமகேந்திரன் வரவேற்றார். ஓய்வு பெற்ற பிரிவு செயலர் ஸ்டீபன் சற்குணம் முன்னிலை வகித்தார்.

மாநில பொதுச்செயலர் இரா.தாஸ் கோரிக்கைகளை குறித்து விளக்கினார். நிர்வாகிகள் பாண்டியன், ரவி, சீனு, முரளி, தனஞ்செயன் பங்கேற்றனர்.

1 comment:

  1. Those who are appointed from on 16.07.2009 as a Secondary Grade Teacher only affected severely in this ( 5200 + 2800 G.Pay ) pay schedule. So please don't intimate all SGT. 8000 new SGTs only spoiled. So mention this separately to CM. She will consider. Don't say all SGT's. She never do anything. Please consider and do.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.