பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர்.
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மாணவர்களின் கல்வி தரத்தை பொறுத்து, உயர்கல்வி வரை இந்த உதவி தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டுக்கான, மாணவர்கள் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. கடந்தாண்டு, ஏழாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பள்ளி வாரியாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேர்வு நடந்தது.
மொத்தம் 540 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆண்கள் பள்ளியில், பதிவு செய்த 240 பேரில், 205 பேர் தேர்வு எழுதினர். பெண்கள் பள்ளியில், பதிவு செய்த 271 பேரில், 260 பேர் தேர்வு எழுதினர். மாணவர்களுக்கு, பாடம் மற்றும் பொது அறிவு சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் குறித்த விபரம் அரசு சார்பில் வெளியிடப்படும்.
மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) நடந்த தேர்வில், மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர். 45 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வில், தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படும். விரைவில், இத்தேர்வு முடிவு வெளியாகும்,&'&' என்றார்.
Sir, What about Computer Teacher Association Vs Computer Science B.Ed.Teacher Welfare society judgement
ReplyDelete