Pages

Friday, December 21, 2012

நம்பிக்கைத் தான் வாழ்க்கை, நாளை நமதே!!!


நாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர். மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்றநாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது.
கொலம்பசுக்கு முந்திய கால அமெரிக்காவில் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. இந்த நாகரித்தைச் சேர்ந்த மக்களே.

கி. மு. 2600 காலப் பகுதியில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்து முறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டடக் கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும்.

மாயன் இனத்தவரின் தோற்றம்

கி. பி. 150 ஆண்டளவில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன் பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண் டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றார்கள்.

தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப்படுகிறது.

20 அடிமான எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திற மைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சி யடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண் டார்கள்.

மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையாக அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையா ண்டார்கள்.

மாயன் கட்டடக் கலை

அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டடக் கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

நவீன வரலாறு, தொல்லியல் மற் றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாசாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல் மாயன்கள் இரு ம்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தாமலேயே மிகப்பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும் பிரமிட்டுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாசார சின்னங்களாகக் காணலாம்.

மாயன் வானியல்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாயன் நாட்காட்டி

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப் படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மானிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியொற் றியே சடங்குகளை நடத்தினர். ட்ரெ டெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மதச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர் இலக்கியம்/ நூல்கள்.

ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறைமை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்ற வற்றில் எழுதியது. மட்டுமில்லாமல் ஒருவகையான புத்தகம், தயாரிக்கும் முறைமையயும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஸ்பானிய ஏகாதி பத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

இவ்வளவு வளமாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமா னது அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை. ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் கொலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன் களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவை யெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். 
அழியுமா உலகம்?
திடீரென ஒரு பரபரப்பு உலகின் பார்வையை இருள்மண்டிக்கிடந்த அமெரிக்கக்காடுகளுக்கு திருப்பியது. ஆனால் அந்தப்பார்வையில் ஆழ்ந்து தேடும் தேடலுக்கான அறிகுறியைவிட அஞ்சும் மரணபயமே தென்படுகிறது. ஆம்….அழியுமா உலகம்? இந்தக்கேள்வி தோன்றிய இடத்திலிருந்தே விடையை தேட ஆரம்பித்துள்ளனர்…..

ஸ்பெயின் சிப்பாய்களின் படையெடுப்பால் சின்னாபின்னமாகிப்போன மாயன்களின் மாயதேசத்திலிருந்து உலகிற்கு ஒரு புதியசெய்தி கிடைத்தது அந்த செய்தியை தாங்கி வந்த கல்வெட்டுத்தான் மாயர்களின் நாட்காட்டி. ஆனால் அந்த செய்தியை முற்றுமுழுதாக சரியான முறையில் மொழிபெயர்க்கும் அல்லது புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றைய மனிதர்களிடம் மங்கித்தான் போய்விட்டது. ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டப்படி புரிந்துகொண்டார்கள். ஆனால் எல்லோருடைய கருத்துக்களும் ஒரு விடயத்தில் ஒத்துப்போகிறது. அதுதான் நாட்காட்டியின் ஆரம்பகாலமும் முடிவுக்காலமும். கி.மு 20ம் திகதி செப்டம்பர் மாதம் 3113 ஆம் ஆண்டை தொடக்க ஆண்டாக கொண்ட அந்த நாட்காட்டி 21ம் திகதி டிசம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. அந்த நாட்காட்டி எம்மவர்களின் நாட்காட்டியிலிருந்து சற்று வேறுபட்டது. நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.

19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 கின் = 1 துன்
7200 கின் = 1 கதுன்
144 002 கின் = 1 பக்துன்
1 872 025 கின் = 13 பக்துன்
2 880 025 கின் = 1 பிக்துன்
57 600 025 கின் = 1 கலப்துன்

இப்படியாக விரிகிறது மாயர்களின் நாட்காட்டி. இது இயற்கை மாற்றங்களையும் காலநிலைகளையும் அடிப்படையாகக்கொண்டது. அது மட்டுமன்றி கடவுள்களுடன்பேசுவதாகவும் வேற்றுக்கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்வதாகவும் வரையப்பட்டுள்ள சித்திரங்களும் மாயர்களைப்பற்றி ஒரு புதிய எண்ணக்கருவை உருவாக்குகின்றன.

மாயன்களின் கணிப்புப்படி உலகம் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உலகம் குறித்த காலத்திற்கு ஒரு முறை புதிப்பிக்ப்படும். உலக வரலாற்றில் நாகரிகம் தோன்றிவளர்ந்து சரித்திரம் படைத்த முக்கிய இடங்களான சிந்துசமவெளி, எகிப்து மக்களிடையேயும் இத்தகைய நம்பிக்கைகள் குடிகொண்டுள்ளன. சிந்துநதியோரம் தோன்றிய எமது நாகரிகத்தில் பிரளய காலம் என குறிப்பிடப்படுவதும் நைல்நதிக்கரையோலம் நடைபயின்ற எகிப்திய நாகரிகத்தில் Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் காலமென குறிப்பிடப்படுவதும் இவ்வாறானதொரு மாற்றமேற்படும் காலம்தான்.

மாயர்களின் வானியல் அறிவுக்கு அவர்களுடைய சூரியக்கடவுளுக்கான கோயிலிலுள்ள சூரியனின் தட்சணாயன, உத்தராயண கால மாற்ற நாளில் மட்டும் ஒளிபுகக்கூடிய மண்டபமே சாட்சி. அதுமட்டுமன்றி மந்திர மாயங்களிலும் கைதேர்ந்து விளங்கிய மாயர்களின் கணிப்பை இலகுவில் புறந்தள்ளமுடியாது. மாயர்களின் நாட்காட்டியுடன் ஒத்தூதும் வண்ணம் விஞ்ஞானிகளும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளனர். விண்கல் ஒன்று பூமியுடன் மோதலாம் என்றும் சூரியப்புயல் புவியை தாக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கட்டியம் கூறுகின்றனர். பூமியின் மின்காந்தப்புலங்களின் திசை மாற்றமடையலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

அதேசமயம் உலகப்புகழ்பெற்ற தீர்க்கதரிசி நஸ்ரடோமஸ் இன் கணிப்புக்கள் 2012 ஐயும் தாண்டி நீள்வதால் 2012 டிசம்பர் 23 உலக அழிவுக்குரிய நாளல்ல எனக்கொள்ளலாம்.

உலகஅழிவைப்பற்றிய செய்திகள் வந்ததிலிருந்து ஒப்பிட்டு பார்க்கையில் மாயர்களின் நகரப்பகுதி சுற்றுலாப்பயணிகளால் நிறைந்துவிட்டது. நல்ல வருமானம் கொழிக்கும் துறையாக சுற்றுலாப்பயணத்துறை அரசுக்கு காசை அள்ளிக்கொட்டுவதாக தகவல். சரியான சமயம் பார்த்து வெளிவந்த 2012 உலக அழிவு தொடர்பான திரைப்படமும் சக்கைப்போடு போட்டு தயாரிப்பாளருக்கு பணமழை பொழிந்ததும் அறிந்ததே. அதெல்லாவற்றையும் தூக்கிவிழுங்கும் சம்பவங்கள் இலங்கையின் சில பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரண மனித பலவீனத்தை பயன்படுத்தி மதம் மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவது வேடிக்கையானது. பல இடங்களில் சுவரொட்டிகளாகவும் சில இடங்களில் வீடுவீடாக பிரச்சாரமாகவும் இவ்வாறு முழங்கப்படுகிறது.

”உலக அழிவிலிருந்து உங்களைக்காக்க ********** ஆல் மட்டுமே முடியும், ஆகவே விரைவாக ********** இனுடைய பாதத்தை பற்றிக்கொள்ளுங்கள்.”

இதே கூட்டம் 2000 ம் ஆண்டு (மிலேனியம்) ஆரம்பத்தின்போதும் இதே முறையை பயன்படுத்தி கூட்டம் சேர்த்தது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.
இப்படியாக ஒன்றுமே இல்லாத விடயத்தை சுயலாபங்களுக்காக ஊதிப்பெரிதாக்குவதாக வாதிடும் தரப்பின் கருத்துக்களையும் வெறுமனே ஒதுக்கிவிடமுடியாது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் உலகில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதே தவிர சூரியமண்டலத்திலிருந்து சுற்றும் பூமி காணாமல் போய்விடும் என்ற அளவிற்கு யோசிக்கத்தேவையில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.