நாடு முழுவதும் இன்று மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 7-வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும். 50 சதவீதம் அகவிலைபடியை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5
லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்தியா முழுவதும் சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டனர். அகில இந்திய அளவில் நடந்த இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் மட்டும் 1 1/2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால், தபால் துறை, வருமானவரித் துறை, கணக்கு தணிக்கை துறை, கல்பாக்கம் அணு ஆற்றல் துறை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி கிடந்தன. கிண்டி ராஜ்பவன் மற்றும் சாஸ்திரி பவனில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்களில் இன்று வழக்கமான பணிகள் முடிங்கின. குறிப்பாக, வருமான வரித்துறை மற்றும் தபால் துறை சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.