தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, உபரி பணியிடத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீள் கலந்தாய்வு நடத்தி முந்தைய கால குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள முதன்மை கல்வி அலுவலருக்கு இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இதைப்போல, இயக்கத்தின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இலவச திட்டங்களை வழங்க தனி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.
தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குவதை தவிர்க்க வேண்டும். கலந்தாய்வில் உபரி பணியிடத்தில் வெளியேற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தை பேருந்து, குடிநீர், கழிப்பிட வசதி உள்ள பள்ளிகளில் அமைக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.