Pages

Thursday, December 20, 2012

பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 75 டி.இ.ஓ.,கள் பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் : இயக்குனர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், நேர்மையான முறையில் நிரப்பப்படும்' என, பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். இத்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் முக்கியமானது. முப்பருவ கல்வி முறையில், முழுமையான தொடர்
கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் வழங்குவது, பள்ளிகள், மாணவர்கள் கல்வித் தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்குவதற்கான ஒப்புதல் போன்ற பணிகளில், டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் தற்போது, 75 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன.டி.இ.ஓ.,க்களுக்கான பணிமூப்பு பட்டியல், இந்தாண்டு ஜனவரியிலேயே தயாரிக்கப்பட்டு, கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான எவ்வித அறிவிப்பும், இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: காலியாக உள்ள, டி.இ.ஒ.,க்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பணிமூப்பு பட்டியலில், 15 தலைமையாசிரியர்களுக்கு சரியான, "ரெக்கார்டு' இல்லை. பொதுவாக, 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டுமென்றால், பணிமூப்பு பட்டியலில் உள்ள, 100 பேருக்காவது, "ரெக்கார்டு'கள், பணிப் பதிவேடு சரியாக உள்ளதா என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது வழக்கமான நடைமுறை. "ரெக்கார்டு' பிரச்னை உள்ள தலைமையாசிரியர்கள் குறித்து அவர்களுக்கு மேல் பணியாற்றிய டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்களிடம் சரியான ஆவணங்கள் கேட்டு பெற்று வருகிறோம். காலிப்பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. all post um promotion thana,tnpsc valia exam kidayatha deo post ku

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.