பிரிட்ஜ் கோர்ஸ்' எனப்படும் நீதி போதனை வகுப்பு குறித்து உயர்கல்வி துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு அறிவிப்பு வராததால் கவுன்சிலிங் முடித்த முதலாமாண்டு மாணவர்களுக்கு 15ம் தேதிக்கு பிறகே கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளது.
1979-க்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி., முடித்த மாணவர்கள் கல்லுாரியில் பி.யூ.சி., படித்து அதன்பிறகே பல்கலை கழகம் சார்பில் வழங்கப்படும் டிகிரி படிப்பை மேற்கொண்டனர். பி.யு.சி., யில் அவர்கள் நீதிபோதனை வகுப்பு டிகிரி படிப்புக்குரிய ஆயத்த படிப்பை மேற்கொண்டனர். இதனை 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்று அழைத்தனர்.
1979-க்கு பிறகு தமிழகத்தில் பி.யு.சி., படிப்பு நடைமுறை மாற்றப்பட்டு, 10-ம் வகுப்புக்கு பிறகு பள்ளியிலேயே பிளஸ் 2 வரை படிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. பிளஸ் 2 வரை படித்து வரும் மாணவர்கள் மதிப்பெண்ணை மட்டுமே முன்னிறுத்தி படித்து வருவதால் கல்லுாரிகளில் அவர்களுடைய சிந்தனை மாறுபடுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு முதலாமாண்டு கல்லுாரி மாணவர்களுக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்' எனப்படும் நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் மே 30-க்குள் அனைத்து அரசு கல்லுாரிகளும் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு கவுன்சிலிங்கும் நடந்து முடிந்தது.
இளங்கலை இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி கல்லுாரி ஆரம்பிக்கப்பட உள்ளது. ஜூன் 1-ம் தேதி (இன்று) முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் நீதிபோதனை வகுப்பு குறித்த முறையான அறிவிப்பு கல்லுாரிகளுக்கு வராததால் 18-ம் தேதிக்கு பிறகே இவர்களுக்கு கல்லுாரி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதற்காக பிளஸ் 2 ரிசல்ட் வந்த உடனே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடனே கவுன்சிலிங் வைக்கப்பட்டது. கால இடைவெளி குறைபாட்டால் பல மாணவர்கள் அனுப்பிய விண்ணப்பங்கள் 'லேட்' விண்ணப்பங்களாகவே கல்லுாரிக்கு வந்து சேர்ந்தன.
விண்ணப்ப தாமதத்தினால் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்கள் பலர் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. கடந்த ஆண்டைப் போல் ஜூனிலேயே கவுன்சிலிங் நடத்தினால் மாணவர்கள் பயன்பெற்றிருப்பார்கள் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment