அமெரிக்காவில் அதிகம் சம்பளம் பெறும் 200 சிஇஓ (தலைமை செயல் அதிகாரி) களில் வெறும் 13 பேர் மட்டுமே பெண்கள். அந்த 13 பெண்களில் இந்தியரான இந்திரா நூயி 5 வது இடத்தில் இருக்கிறார்.
பெப்சி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பல ஆண்டுகள் பணிபுரியும் இந்திரா நூயி யின் ஒரு ஆண்டு சம்பளம் 19.1 மில்லியன் டாலர். அதாவது ஒரு கோடியே 91 லட்சம் டாலர். மாதம் சுமார் 16 லட்சம் டாலர். நம் ஊர் கணக்குக்கு மாத சம்பளம் சுமார் 10.2 கோடி ரூபாய்
முதல் இடத்தில் இருப்பவர் யாகூ நிறுவனத்தின் சிஇஓ மரிசா மேயர். இவரின் ஆண்டு சம்பளம் 42.1 மில்லியன் டாலர். அதாவது மாத சம்பளம் சுமார் 22.45 கோடி ரூபாய்.
No comments:
Post a Comment