
கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.
மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ இயந்திரம் இன்று காலை 7 மணி 41 நிமிடங்களுக்கு செயல்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக செயல்பட்ட திரவ இயந்திரம் நொடிக்கு 22 கிலோ மீட்டர் என இருந்த மங்கள்யானின் வேகத்தை ஏறக்குறைய நொடிக்கு 2 கிலோ மீட்டராகக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வாயின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட, மங்கள்யான் விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் சரியாக 8 மணிக்கு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
460 கோடி ரூபாய் செலவில் செவ்வாயை ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட மங்கள்யானின் பயணம் வெற்றியடைந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இணைந்துள்ள முதல் ஆசிய நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் விண்கலம் செலுத்தப்படும் நிகழ்வை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தொலைநிலை விண்வெளிக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வைட்டனர்.
இவர்களுடன் கர்நாடக முதல்வரும் உடன் இருந்தார். தூர்தர்ஷனில் காலை 6.45 முதல் இந்த நிகழ்வு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment