Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 7, 2014

    வாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

    "மாணவ, மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடத்தில், பாட புத்தகத்தை வாசிக்கும் திறன் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தனர். இதில், தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் முழுமையாக வாசிக்க கூட முடியவில்லை என்பதை கண்டறிந்தனர்.


    சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டுமே தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில், பாட புத்தகங்களின் வாசிப்பு திறன் சிறப்பாக உள்ளது தெரியவந்துள்ளது. மற்றபடி, அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் முதல் 15 இடங்களை பிடித்த, மாவட்டங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில் கூட வாசிப்பு திறன் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எச்சரிக்கை: திறன் குறைந்த தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கற்பிக்கும் ஆசிரியர்கள் மிக கவனத்துடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அடுத்து, பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தப்படும் போது, மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் அதிகரித்து இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.


    கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது; கல்வித்துறை இணை இயக்குனர் தகுதியில், கண்காணிப்பு அலுவலர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் தோறும் ஆய்வு செய்ததில், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் மிக குறைவாக உள்ளது. தமிழ் பாடத்தை வாசிப்பதில் கூட பின்தங்கி உள்ளனர். மாநிலத்தில் வாசிப்பு திறன் குறைந்த மாவட்ட பட்டியலில், சிவகங்கை 26வது இடத்தில் உள்ளது. மாவட்ட, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

    2 comments:

    saravanan.p said...

    Tamil majarukku posting podakoodathoo. Appuram eppadi vasippanga. Science, social science sir a vasikka katru koduppar ? "Sattiyila irunthaal thaan akaapyil varum" .

    saravanan.p said...

    Tamil majarukku posting podakoodathoo. Appuram eppadi vasippanga. Science, social science sir a vasikka katru koduppar ? "Sattiyila irunthaal thaan akaapyil varum" .