தேவகோட்டை நகராட்சி சார்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் மாணவ, மாணவியர்க்கு இரும்பு சத்து மாத்திரை வழங்குதல்,பொது மருத்துவ முகாம் என இருபெறும் நிகழ்ச்சியாக நடைபெற்றபோது எந்த சூழ்நிலையிலும் ,பெண்கள் முன்னேற பெண்கல்வி அவசியம் என நகராட்சி தலைவி சுமித்ரா ரவிக்குமார் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை நகராட்சி தலைவி விழாவில் பேசும்போது,நானும் ஒரு ஆசிரியராக இருந்துதான் பிறகு நகராட்சி தலைவியாக இந்த பதவியில் உள்ளேன்.தமிழக அரசு பள்ளிக் குழந்தைகள் உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நன்கு கல்வி கற்க முடியும் என்பதற்காக எல்லாப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வியாழகிழமை தோறும் இரும்பு சத்து மாத்திரைகளை நகர ,ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மருத்துவர்களை வைத்து வழங்கி வருகிறது.நல்ல உடல்நலத்தோடு கல்வி கற்றால்தான் பெண்கள் உட்பட அனைவரும் எந்த சூழ்நிலையிலும், சிறப்பாக செயல்பட முடியும். அனைவர்க்குமே கல்வி மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தி பேசினார்.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மீரா அலி,எட்டாவது வார்டு கவுன்சிலர் போஸ்,நகராட்சி மருத்துவர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அலுவலர் பிரியா பள்ளி மாணவர்களையும் ,பெற்றோர்களையும் பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கினார்.பெற்றோர்களுக்கு இரத்த அழுத்தம்,உடல் எடை,சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டன.அந்த அந்த வகுப்பு ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கி வாரந்தோறும் வியாழகிழமை இரும்பு சத்து மாத்திரை மாணவர்களுக்கு வழங்கவது தொடர்பாக விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பெரோஸ்கான்,ஓவர் சியர் செழியன், நகராட்சி சுகாதார நிலைய செவிலியர்கள் உட்பட எராளமான பள்ளி மாணவ,மாணவியரின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment