Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 17, 2014

    அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள்

    அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரத்து 700 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,700 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடந்தது.
    அப்போது,"வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியனம் நடப்பதால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதி இழப்பதாகக் கூறி டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை ஆணை பெற்றனர். இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்று வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பணி நியமன கவுன்சிலிங்கில் பங்கேற்ற பலர், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளி வேலையை விட்டனர். தற்போது, அரசு ஆசிரியர் பணி கிடைக்காததால் தவிக்கின்றனர். இவர்களில் தேனி மாவட்டத்தில் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேனி கலெக்டர் பழனிசாமியிடம் பணி நியமனம் கேட்டு நேற்று மனு அளித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளது போல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சிக்கலுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    4 comments:

    Unknown said...

    Today maduri court stay case enna achi sir vijayakumar chennai sir....

    Unknown said...

    Today maduri court stay case enna achi sir vijayakumar chennai sir....

    Unknown said...

    Today maduri court stay case enna achi sir vijayakumar chennai sir....

    Unknown said...

    Today maduri court stay case enna achi sir vijayakumar chennai sir....