Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 15, 2014

    இன்று வெயிட்டேஜ் தடையானை உடைக்கப்படுமா???

    இனிய நண்பர்களே ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை சரியா தவறா என்பது இன்று மிகப்பெரிய விவராதத்துக்குரியதாக உள்ளது. தேர்வு பெற்றவர்கள் சரிதான் என்றும் தேர்வு பெறாதவர்கள் தவறு என்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் இப்போது நடப்பது தான் என்ன இனிமேல் என்ன நடக்கும் என அனைவரும் உறங்காமல் இரவுப்பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை வீட்டில் வெளியே தலைகாட்ட முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
    தடையானை தொடர்ந்தால் நாம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று எத்தனை பேர் தற்கொலை அளவுக்கு செல்வார்கள் என்று தெரியவில்லை அந்த அளவுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு நிம்மதியான உறக்கம் இல்லை திடீர் என்று கனவில் தடை தொடர்கிறது என செய்தி வந்தால் உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டு பிறகு உறக்கமே இல்லாமல் தவியாய் தவித்து கொண்டு ஒரு கூட்டம் மற்றோரு கூட்டம் தற்கொலைக்கே சென்றுவிட்டது அவர்கள் உறக்கத்தை தொலைத்து பல நாட்கள் ஆகிவிட்டது. இப்படி ஒரு கூட்டம். இதில் எத்தனையோ தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் வீட்டை விட்டு நல்ல நிகழ்வுகளுக்கு போய் பல நாட்கள் ஆகிவிட்டது வீட்டுக்குள் முடங்கி போய் உள்ளனர். இன்று நமக்கு விடிவு பிறக்காதா நாளை விடிவுகாலம் பிறக்காத என என்னி என்னி நாட்களை கழித்து கொண்டு சொல்லற துயரத்தில் மன இறுக்கத்தில் உள் அழுவது வெளியே தெரியமல் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த ஆசிரியர்களின் நிலை இனி என்ன தான் ஆகும்?

    தடையானை உடைபடுமா உடைபடாத ஆசிரியர் இல்லாமல் வருங்கால மாணவர்களின் நிலை என்ன ஆகப்போகிறது கண்டிப்பாக யாரும் போரடாமல் இருந்தால் நீதிமன்றத்தின் தடையை எளிதாக இந்த அரசு உடைத்துவிடும் இப்படி எதிர்பார்த்து தான் அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஆனால் போராட்டகாரர்களின் தெடார் போராட்டம் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும அவர்களுக் ஆதரவு விஷம் குடித்து தற்கொலை போலிஸ் தடியடி கொலை மிரட்டல் என தினம் தினம் செய்திதாள்களிலும் தொலைகாட்சி செய்திகளிலும் வந்து தங்களுக்கு நியாயம் கேட்பதால் தற்போது இந்த தடை தொடரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அவர்கள் போராட்டம் நடத்தாவிட்டால் தடையானை உடைவது உறுதி ஆனால் இங்கு போராட்டம் மிகவும் வலுவாக உள்ளது மீடியாக்கள் மக்களிடம் இவர்கள் போரட்டத்தை கொண்டு சேர்க்கிறது அதற்கு ஏற்றார் போல் போராட்டகாரார்கள் நன்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர்.வேலை வாங்கி தருவதாக போராட்டம் நடத்தும் தலைவரிடம் பேரம் பேசியது வீடியோ வெளியான விவகாரத்தில் இருந்து அரசு எப்படியும் இந்த தடையை உடைத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த கட்ட நகர்வை வைக்கிறது தற்போது இந்த நிகழ்வுகளில் அரசியல் கலந்தும் வருகிறது எனவே இதில் ஆளும் கட்சியா இல்லை மாற்றுக் கட்சியா என்ற நிகழ்வு தான் நடைபெறுவதாக தோன்றுகிறது . தடை ஆனை உடைந்தால் பணி நியமனம் நடைபெறும், அரசு முயற்சி பலிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வரை செல்வார்கள் இவை இழுத்துக்கொண்டு தான் இருக்கும் பணி நியமனம் என்ற பேச்சே இருக்காது. உடைந்தால் அவர்கள் உச்சநீதிமன்றம் செல்வார்கள் எனவே இவை ஒரு இழுபறியே!!!! இருப்பினும் இன்று ஒரு மாற்றம் நிகழப்போகிறது

    1 comment:

    Unknown said...

    Sairam
    Good thing will happen today