தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. &'இத்தகைய குறைபாடுகளை களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்&' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில், மாவட்டந்தோறும் உள்ள கல்வி அதிகாரிகளின் சார்பில், ஆய்வுப்பணிகள் நடந்தன.இதில், பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில், மாணவர்கள் மொழி உச்சரிப்பில் தடுமாறுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நடுநிலைப்பள்ளி மாணவர்களே தமிழ்ப்பாட உரைநடைப்பகுதியில், பத்திகளை முழுமையாக வாசிப்பதற்கு கூட சிரமப்பட்டுள்ளனர். ஆங்கிலப்பாட புத்தகத்தில் பெரும்பாலான வார்த்தைகளின் பொருள், உச்சரிக்கும் விதம் தெரிவதில்லை. இது தொடர்ந்தால், உயர்கல்வியில் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும்&' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
1 comment:
Minimum level of learning needed in our School tamilnadu .ARGTA brte association tamilnadu m.o madurai b.o villupuram by Harikrishnan brte vpm 9443378533
Post a Comment