Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 11, 2014

    ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    புதுடெல்லி :இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் நாடு முழுவதும் செல்லக்கூடிய அடையாள அட்டை வழங்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதார் திட்டத்தை கொண்டு வந்தது. ஆதார் அட்டைக்காக ஒருவரது கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவு செய்யப்பட்டன.இதற்கு
    பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குடிமகன்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையில் புதிய அரசு அமைந்தது. இதனால் ஆதார் திட்டம் தொடருமா என கேள்வி எழுந்தது.இந்நிலையில் ஆதார் திட்டம் தொடரும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக கடந்த பட்ஜெட்டியில் நிதியும் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் ஆதார் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து கடந்த சனிக்கிழமை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    இதன்பின்னர் நேற்று அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆதார் திட்டத்துக்காக ரூ. 1200 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆதார் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 67 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்குள் 100 கோடி பேருக்கு அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக கருதப்படும் .பி.யில் மொத்தமுள்ள 20 கோடி பேரில் 4.6 கோடி பேருக்கு மட்டுமே ஆதார் அட்டை கிடைத்துள்ளது. இதே போல் 10.38 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் 1.4 கோடி பேருக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள நிதி .பி., பீகார் போன்ற ஆதார் பின்தங்கிய மாநிலங்களில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

    1 comment:

    satyajith said...

    *********************************************************
    இடைநிலை ஆசிரியர்களுக்கு
    அழைப்புக் கடிதம்
    **********************************************************

    """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
    SGT

    இடம் : சென்னை மெரினா
    நாள் : 14.09.2014
    நேரம்:காலை 10 மணி

    மிக முக்கியமான செய்தி:
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

    ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
    நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

    நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
    இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

    ***************************
    !! SUNDAY 14.09.2014 !!
    !! COME TO CHENNAI !!
    !! JOIN AT MERINA !!
    !! DEMAND +VACCANCY !!
    ***************************

    WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

    வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

    95433 91234 Sathyamoorthy
    9597239898
    09663091690 Sathyajith

    Don't delay
    we have short period to reach the goal.