Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 18, 2014

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளை தரம் உயர்த்த பரிந்துரை

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வி துறைக்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான பட்டியலை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திடம், பள்ளிக்கல்வி துறை, கடந்த மாதம் கேட்டிருந்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், போதுமான இடவசதி, வகுப்பறைகள், மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து உதவி, தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில், லத்துார் ஒன்றியத்தில் உள்ள பெரிய வெளிக்காடு ஊராட்சி நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஒழையூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள தம்மனுார் ஊராட்சி நடுநிலைப் பள்ளி, செயின் தாமஸ் மவுன்ட் ஒன்றியத்திலுள்ள, கீழ்க்கட்டளை நகராட்சி நடுநிலைப் பள்ளி என, நான்கு பள்ளிகள் கண்டறியப்பட்டு, இவற்றை தரம் உயர்த்த பள்ளிக்கல்வி துறைக்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

    13 comments:

    S. K. Raju, Advocate said...

    இந்த தகவலுக்கு ஆதாரம் என்ன ? எந்த அடிபடையில் போடப்பட்டுள்ளது ? பதிவேற்றம் செய்தது யார் ?

    What is the source of this post? Who posted it?
    Email : skr.light1966@gmail.com

    S. K. Raju, Advocate said...

    இந்த தகவலுக்கு ஆதாரம் என்ன ? எந்த அடிபடையில் போடப்பட்டுள்ளது ? பதிவேற்றம் செய்தது யார் ?

    What is the source of this post? Who posted it?
    Email : skr.light1966@gmail.com

    Anonymous said...

    ஆசிரியர் சங்கங்களுக்கே தகவல் தெரியாதபோது, இப்படி தகவல் கொடுத்த புத்திசாலி யார் :P

    Anonymous said...

    பள்ளிக்கல்வித்துறையே பட்டியல் வெளியிடாத போது, பதறிக்கொண்டு இதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன ?

    Kumar said...

    நம்பகத்தன்மை இல்லை

    Anonymous said...

    லூசாப்பா நீ

    சந்திரன் said...

    தவறான செய்தி

    வெற்றிவேல் said...

    அரசு ஆணை எங்கே ?

    Anonymous said...

    அடேங்கப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா

    சதீஷ் said...

    அறையும் குறையுமா காதில் விழுந்ததை போட்டது இருக்கட்டும், இதில் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை எனைய்யா வம்பில் மாட்டி விடுகிறீர்கள்

    பாலன் said...

    உண்மை பாதி பொய் பாதி கலந்து செய்த கலவை

    Anonymous said...

    ஐயோ, இப்பவே கண்ண கட்டுதே. முடியலடா சாமி

    Unknown said...

    வணக்கம், தாங்கள் கோரிய இந்த பதிவு (காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளை தரம் உயர்த்த பரிந்துரை) தினமலர் நாளிதழின் வலைதளமான கல்விமலரில் 18.08.2014 அன்று வெளியிடப்பட்டது. அதை தான் நமது வலைதளத்தில் வெளியிட்டுள்ளேன். நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட Commentகள் வருவதால், பெரும்பாலும் Comment பகுதிகளை நாங்கள் கவனிப்பதில்லை, ஆகையால் உங்களின் Commentகளை கவனிக்கவில்லை, அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனி வருங்காலங்களில் தாங்களுக்கு ஏதேனும் விவரம் தேவைப்பட்டால் எங்களுடைய இமெயில் tnkalvi@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். இத்துடன் அந்த செய்தி வெளியிட்ட நாளிதழின் லிங்க்ஐ http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25881&cat=1 இணைத்தனுப்புகிறேன்.