Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 9, 2014

    ஓவியம் வரைவது எப்படி? நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

    தேவகோட்டை ஆக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர்  கண்டனூர் ஆவுடையப்பன் மாணவமாணவிகளுக்கு ஓவியங்கள் வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.


                                                பயிற்சியிக்கு வந்தவர்களை  ஏழாம் வகுப்புமாணவி தனம் வரேவேற்றார்.   பயிற்சியின் ஆரம்பமாக   அபிராமிஅந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது.பயிற்சிக்கு பள்ளியின்தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர் கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள்வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.முதலில்மாணவ,மாணவிகள் ஏற்கனவே வரைந்த ஓவியங்களைபார்வையிட்டு திருத்தம் செய்தார் .அனைத்து மாணவர்களையும்வெள்ளைத்தாளில் முதலில் பென்சில் ஓவியமாக தாமரையைவரைய சொன்னார்.பென்சிலால் வரையும்போது எப்படி எல்லாம்வரைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார்.அவருடையமனைவி உமையாள் ஆச்சியும் உடனிருந்து பயற்சி அளித்தார்.
                                                                      கலைமாமணி  ஓவியர்ஆவுடையப்பன் பயற்சியில் பேசும்போது கூரியதாவது ,குழந்தைகளின் ஓவியம் எப்பொழுது முழுமையடையும் என்றால்என்னைப் போன்ற ஓவிய ஆசிரியர்களால் திருத்தம்செய்யப்படும்போதுதான் அவை முழுமையடையும் .பென்சில்ஓவியம்,வண்ண ஓவியம் இவற்றிற்கு தனித் தனியே நோட்டுவைத்து வரைய வேண்டும்.ஓவியம் வரைந்து பழக வேண்டும்என்பது அச்சடிக்கப்பட்ட படத்தைப் பார்த்து வரையாமல் வரைந்தஓவியத்தை பார்த்து வரைவது ஆகும்.முதலில் வெளி வட்டம்வரைந்து பழக வேண்டும்.வரைந்து பழக கூடிய நோட்டுக்களைவாழ்க்கை முழுவதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.தாளில் கோடு போட்டு பாதியாக வரைந்து பழகுதல்வேண்டும்.எப்பொழுதும் நிதானமாக,பொறுமையாக வரைய கற்றுக்கொள்ளவேண்டும்.ஓவியம் வரைய அதிக நேரம் எடுத்துக்கொண்டால் ஓவியம் சிறப்பாக அமையும் இவ்வாறு பேசினார்.
                                                                 மாணவிகள்சொர்ணம்பிகா,கிருஷ்ணவேணிபரமேஸ்வரி,,காயத்ரி,சௌமியா,பவனா ,மங்கையர்க்கரசி  மற்றும்மாணவர்கள்    நடராஜன்,பவித்ரன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டுபதில்கள் பெற்றனர்.பயிற்சியின் நிறைவாக ஓவியர் சில மாதிரிபடங்களை மாணவர்களுக்கு வழங்கி பயிற்சிஅளித்தார்.பயிற்சியினை  ஆசிரயர் முத்துலெட்சுமி தொகுத்துவழங்கினார்.மாணவன் கண்ணதாசன் நன்றி கூறினார்.பயிற்சிக்கானஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்திருந்தார்.
      பட விளக்கம் : 1) IMJ-1209 தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவியம் வரைவது தொடர்பானபயற்சி முகாமில்  
     கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர் கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள்வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.உடன் உமையாள்ஆச்சி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
    2) IMJ-1214,1216,1201  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில் ஓவியம் வரைவது தொடர்பான பயற்சிமுகாமில்  
     கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர் கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள்வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.உடன் உமையாள்ஆச்சி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்





    No comments: