Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 14, 2014

    அரசுப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா?

    அனைத்து மாணவர்களும் கணினி கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு கணினிக் கல்வியை மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு பாடமாகக் கொண்டு வந்தது. முதலில் தமிழக அரசின் எல்காட் மூலமாக தனியார் கணினி பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பள்ளிகளுக்கு கணினிப் பாட ஆசிரியர்கள், 10-க்கும் மேற்பட்ட கணினி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை 15 வருட ஒப்பந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    பின்பு, ஒப்பந்தம் முடிந்த தறுவாயில் 2008 ஆம் ஆண்டின்போது தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பணிபுரிந்த அனைவருக்கும் தகுதித் தேர்வு வைத்து, அதில் தேர்வானவர்களை அரசுச் சம்பளத்தில் பணியமர்த்தியது. அதனிடையே, ஒருசிலரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்தது. ஆனால், அதன் பின்னர் முழுநேர ஆசிரியராக அரசின் மூலம் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
    மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும்தான் கணினிப் பாடத்துக்கென்று நிரந்தரமான ஆசிரியர் உள்ளார். மற்ற பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியின் மூலமும், சில பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலமும் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    ஆனால், இதில் உள்ள பிரச்னை என்னவென்றால், அரசு வகுத்துள்ள விதியின்படி சிறப்பு ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் என 12 நாள்கள்தான் பணிக் காலமாகும்.
    மேலும், அவர்கள் அரசின் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கணினிப் பாடம் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டவர்கள். அவர்களால், அவர்களுக்கு இருக்கும் குறுகிய நேரத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பாடத்தை முடிக்க முடியாமல் போகிறது. மீதி நாள்களில் மாணவர்களை வழிநடத்த சரியான அதே துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் இல்லை.
    இதற்காக ஒருசில பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் தாற்காலிகமாக ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் முழு நேரம் பணியில் உள்ளனர். ஆனால், இதில் மாணவர்களால் கொடுக்கப்படும் பணத்தின் மூலம்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது.
    இதனால் மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படுகிறது, மேலும், மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் போதிய பணம் வசூலாவதில்லை.
    இதனால் பகுதிநேர பாடமாகி விட்டது போன்ற தோற்றத்தை கணினித் துறை ஏற்படுத்துகிறது. எங்கும் கணினிமயமாகி விட்ட நிலையில் அரசுப் பள்ளிகளில் இப்படிப்பட்ட நிலை நீடிப்பது, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.

    மேலும், 2013 ஆம் வருடம் தகுதித் தேர்வின் மூலம் நீக்கப்பட்டவர்கள் 15 வருடம் காலம் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். அவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் அல்லது மீண்டும் தேர்வு வைத்து முழு நேர கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அரசு இந்த விஷயத்தில் ஓர் உறுதியான நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

    11 comments:

    Anonymous said...

    is B.Ed computer science has any future?

    Anonymous said...

    நீ சொன்னதெல்லாம் Correct மாமா. ஆன Last para விட்டாபாரு பீலா. Ellcotகாரன் 652. பேருக்கு 15 வருசம் Experience னு. அதான்யா தாங்க முடில. 15 வருசம் Experience உள்ளவன் ஏன்பா இருமுறை வச்ச Special exam ல Super dooper. Fail ஆனாங்க. அ அ அட நீ அவங்கல பத்தி கவலைபடாதே அந்த நாதாரிக சரியா சொல்லிதராததால லட்சக்கான Students fail போனாங்களே அவங்கல பத்தி மட்டும் Feel பன்னி Dupagoor tnkalvi la news போடு மாமா.

    Anonymous said...

    இருக்குயா One month Wait பன்னு.

    Anonymous said...

    எத்ததடவ சொன்னாலும் Tnkalvi Website நீ திருந்தமாட்டியா? Elcot fail ஆனவ 652 பேர பற்றி News போடாதனா கேட்க மாட்டியாப்பா நீ. திருந்துங்கடா

    Anonymous said...

    நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட் பட்டதாரி. புதிய பணியிடம் உருவாக ஒரே வாய்ப்பு தேர்வு முறை தான் சரியான வழி. பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் இருமுறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தனர். ஆனால் நீ எந்த தேர்வு எழுதாமல் அவர்களை சீண்டுவது நியாயம் இல்லை. முடிந்தால் என்னொடு அல்லது எங்களோடு தேர்வு எழுதி உன்னுடைய திறமையை நிரூபி. உன்னையும் உன் தலைவி நம்பி ஏமாந்தது போதும்.எங்களிடம் 10000,20000 வாங்கி கொண்டு சங்கம் நடத்துகிறவன். வாயை அடக்கி பேசனும்.

    Anonymous said...

    நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட் பட்டதாரி. புதிய பணியிடம் உருவாக ஒரே வாய்ப்பு தேர்வு முறை தான் சரியான வழி. பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் இருமுறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தனர். ஆனால் நீ எந்த தேர்வு எழுதாமல் அவர்களை சீண்டுவது நியாயம் இல்லை. முடிந்தால் என்னொடு அல்லது எங்களோடு தேர்வு எழுதி உன்னுடைய திறமையை நிரூபி. உன்னையும் உன் தலைவி நம்பி ஏமாந்தது போதும்.எங்களிடம் 10000,20000 வாங்கி கொண்டு சங்கம் நடத்துகிறவன். வாயை அடக்கி பேசனும்.

    Anonymous said...

    நீங்க அந்த 652 பேரில் ஒருவர். புதிய
    பணியிடம் உருவாக
    ஒரே வாய்ப்பு தேர்வு முறை தான் சரியான வழி. புதிய பணியிடம் உருவாக்கி அந்த பணியிடங்களுக்கு தேர்வை அறிவிக்க ஏற்பாடு பண்ணுங்க.நீ பணம் கொடுத்தவரிடம் கேளு.இல்லைன்னா TRB முன்னாடி போய் போராடுங்க.10000. 20000 கொடுத்தவங்க ஏமாறலாம்.நீங்க ஏமாற வேண்டாம். வாயை அடக்கி பேசனும்.Mr.

    Anonymous said...

    நீங்க அந்த 652 பேரில் ஒருவர். புதிய
    பணியிடம் உருவாக
    ஒரே வாய்ப்பு தேர்வு முறை தான் சரியான வழி. புதிய பணியிடம் உருவாக்கி அந்த பணியிடங்களுக்கு தேர்வை அறிவிக்க ஏற்பாடு பண்ணுங்க.நீ பணம் கொடுத்தவரிடம் கேளு.இல்லைன்னா TRB முன்னாடி போய் போராடுங்க.10000. 20000 கொடுத்தவங்க ஏமாறலாம்.நீங்க ஏமாற வேண்டாம். வாயை அடக்கி பேசனும்.Mr.

    Anonymous said...

    நீ யார்டா நாய்? Computer ல உனக்கு தெருஞ்சது Cut copy paste மட்டும்தான் போல. நீங்க 652 பேரும் இன்னும் சாகலயாடா?

    Anonymous said...

    நாய்க்கு பிறந்த நாய் பேச தகுதியில்லை

    Anonymous said...

    4340 அரசு உயர்நிலை மற்றும்
    மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்
    நுட்ப கல்வி
    கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.
    பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான
    கல்வி அறிவு இருந்தால்தான்
    கல்லூரி படிப்பிற்கு செல்லும்போது எளிதில்
    எதையும்
    கையாள முடியும் என்பதால் மத்திய
    அரசு கணினிக்
    கல்வி திட்டத்தை செயல்படுத்த
    வேண்டும்
    என்று அனைத்து மாநிலங்களுக்கும்
    நிதி ஒதுக்கியுள்ளது.
    அதன் அடிப்படையில் தமிழக அரசு 4340
    அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
    பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த
    உள்ளது.
    இத்திட்டத்தின் கீழ் 5
    ஆண்டுகளுக்கு தனியார் மூலம்
    கம்ப்யூட்டர், பிரிண்டர்
    உள்ளிட்ட சாதனங்களும் ஆசிரியர்களும்
    நியமிக்கப்பட்டு தகவல் தொடர்பு
    தொழில்நுட்ப
    கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
    இத்திட்டத்தை செயல்படுத்த
    ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும்
    உத்தேசமாக ரூ.19
    லட்சத்து 90 ஆயிரம்
    நிதி ஒதுக்குகிறது. மொத்தம் ரூ.86
    கோடி செலவில் 5 ஆண்டு
    ஒப்பந்த அடிப்படையில் கணினிக்
    கல்வி கற்பிக்கப்படும்.
    இதற்கான டெண்டர் பள்ளிக்கல்வி இயக்ககம்
    மூலம் கோரப்பட்டுள்ளது. திட்டத்தை
    செயல்படுத்துதல் மற்றும் ஒப்படைத்தல்
    மூலம்
    தனியாருக்கு கொடுக்கப்படுகிறது.
    இந்த ஆண்டு முதல் இத்திட்டம்
    செயல்படுத்தப்படுகிறது.
    இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும்
    மாணவ–மாணவிகள்
    கணினி கல்வி அறிவை பெற
    முடியும்.
    ஏற்கனவே அரசு சார்பில் பிளஸ்–2
    மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக
    வழங்கப்படுகிறது.
    மடிக்கணினியை பள்ளி மாணவர்கள்
    எளிதாக பயன்படுத்தக்கூடிய
    வகையில் இத்திட்டம்
    நிறைவேற்றப்படவுள்ளது.by 652 Terminated persons