Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 16, 2014

    தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது: சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்!

    தமிழகம் தொடக்கக் கல்வி, மேல்நிலைக் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது என சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் பொங்க கூறினார். 68-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர்:


    மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததோடு, கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து, கல்வியில் ஒரு புரட்சியையே தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை தன்னிறைவு பெற்றுள்ளது என பெருமிதம் தெரிவித்தார். ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்றால், இது போன்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள் மட்டும் போதாது. அவர்கள் கல்வி கற்றவர்களாக திகழும் போது தான் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற முடியும் என்பதால் தான்; கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து, கல்வியில் ஒரு புரட்சியையே அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை தன்னிறைவு பெற்றுள்ளது. இரு விரல் கொண்டு எழுதியவர்கள் இன்று பத்து விரல் கொண்டு கணினியில் எழுதுகிறார்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் இந்த நிதியாண்டில் 19 ஆயிரத்து 634 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதிலிருந்தே; கல்வியில் எந்த அளவுக்கு அரசு கவனம் செலுத்துகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். "யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே" என்று சுதந்திர இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று நனவாகியுள்ளது.

    2 comments:

    Anonymous said...

    Pala ayiram mootha teacher maranam.muthalvar perumitham

    Anonymous said...

    Muthal Go padi muthalil nirappi irukalame.seithirunthal paravaillai.palaperudaiya sabam neenda natkalukku.