Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 19, 2014

    ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

    ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.  அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும், பாதை போட்டுக் கொண்டே பயணம் செய்ய வேண்டும், பயணம் செய்து கொண்டே பாதை போட வேண்டும். 'வெற்றி என்பது பெற்றுக் கொள்ள, தோல்வி என்பது கற்றுக் கொள்ள' என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.ஆசிரியர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. நமக்கு மீறிய சக்திதான் நம் அறிவை தீர்மானிக்கும். தீர்மானிக்கும் இடத்தில் தான் நாம் உதவி செய்ய முயல வேண்டும்.


    மாணவர்களின் படைக்கும் திறன் சிந்திக்கும் ஆற்றலை முதல் வேலையாக எடுத்து செயல்பட வேண்டும்.மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும்.ஆசிரியன் என்பவன், 'வாழ்ந்தால் வானத்தின் எல்லை, வீழ்ந்தால் மரணத்தின் படி' என்பது போல் இருக்க வேண்டும். ஆசீர்வதிக்கப்பட்டவன் மட்டுமே ஆசிரியர். ஆசிரியர்தான் உலகிற்கு சொந்தமானவன்.மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்க ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

    எல்லா இடத்திலும் கேள்வி கேட்பவன் புத்திசாலி அல்ல என்றும், காலம் நேரம் பார்த்து கேட்பவனே அறிவாளி என்றும், கேட்கப்படாத கேள்விகளில் வாழ்க்கையின் மதிப்பு உள்ளது என்பதனையும் உணர்த்த வேண்டும்.
         மாணவர்களை கை கட்டி, வாய் மேல் விரல் வைக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் அவனின் கேள்வி கேட்கும் திறன், துணிவு குறையும்
    .
    வகுப்பில் பாடம் எடுப்பது எப்படி???
    வகுப்பில் பாடம் எடுப்பது என்பது cinema,
    வகுப்பில் பாடம் எடுப்பது என்பது drama,
    வகுப்பில் பாடம் எடுப்பது என்பது entertainment-ஆக இருக்க வேண்டும்.
    எந்தப் பாடதையும் கஷ்டமானது, நானே கஷ்டப்பட்டு படித்து வந்தேன் என மாணவர்கள் முன் கூறக் கூடாது.
          நாம் பெற்ற கல்வியில் நம்பிக்கை, ஆதிக்கம் வர வேண்டும். ஆசிரியன் என்பவன் நிரந்தரமானவன், அவரின் உண்மை நிலையை விட்டுக் கொடுக்கக் கூடாது.
          ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே நாளைய உலகின் அதிசய மனிதர்கள் உருவாகுவார்கள் என்பதனை உணர வேண்டும். ஆசிரியர்கள் கண்ணாடியில் பட்ட பிம்பம் போல் மாணவர்கள் மேல் விழ வேண்டும். வரம்புக் கெடாமல் இருக்க பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
          மாணவர்கள் பார்வையில் ஆசிரியர்கள்:  ஆசிரியரானவர், நடந்தால் ஒவ்வொன்றிற்கும் இலக்கணமாய் -----→ இருக்க வேண்டும்.
    பார்த்தால்
    ஆசிரியர் அறிவின் அடையாளம்
    ஆசிரியர் அறிவின் பிரதிபலிப்பு
    ஆசிரியர் அறிவின் பிரமாண்டமாய்த் தெரிய வேண்டும்.
    ஆசிரியரின் கடமை:
    அறிவை உருவாக்குவது,
    அறிவை ஊட்டுவது,
    அறிவை விதைப்பது,
    அறிவை புதுப்பிப்பது,
    மாணவர்களை மதிப்பது,
    மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவது.
    தர்மத்தின் கருத்து:
    சுண்ணக்கட்டி (Chalk piece) தான் தர்மத்தின் கருத்து.
    ஆசிரியன் நிரந்தரமானவன்; அவனுக்கு என்றும் அழிவே இல்லை.
    ஆசிரியரின் சிந்தனை செயல் ஒன்றாக இருக்குமாறு நடந்து கொள்ள வேண்டும்.
    Chalk piece எடுத்து பாடம் நடத்துபவர் ஆசிரியராக மட்டும் அல்லாமல், மாணவர்களின் கண்ணாகவும், காதாகவும் இருக்க வேண்டும்.
    ஆயிரம் மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் தன்மைக்கேற்றவாறு மாறி செயல்பட வேண்டும்.
    ஆசிரியர்களின் 6 தகுதிகள்(6 Qualifications of a Teacher)
    உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் (sick teacher=sick class).
    கற்பிக்கும் பாடத்தில் ஆழமான அறிவு (intellectual equipment).
    ஒழுக்க சீலர்கள் (moral equipment).

    உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் (emotional equipment) எ.கா., கோபப்படுவது, திட்டுவது, அடிப்பது, மனம் புண்படும்படி பேசுவது இருக்கக்கூடாது.

    1 comment:

    Anonymous said...

    ஆசிரியரின் கடமை:மாணவர்களை மதிப்பது,மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவதுமேலும் மாணவர்கள் காலில் விழுவது , மண்டியிட்டு வணங்குவது மேலும் ..... ஏற்கனவே கணக்கிலடங்கா ஆசிரியர்கள் மாணவர்களால் பல மனஇன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் .... போங்கசார் ..... சமுதாயத்திலும் மாணவர்களிடத்திலும் என்ன மரியாதை எனறு அனைவருக்கும் தெரியும்.....