Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 14, 2014

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு டிஆர்பி செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், டி.ஆர்.பி உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலவளவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்.காம்., பி.எட்., முடித்துள்ளேன்.
    டி.ஆர்.பி., மூலம் கடந்த 21.7.2013ல் நடந்த முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலந்து கொண்டேன். கட் ஆப் மதிப்பெண் 101 பெற்றேன். வினாத்தாள் அமைப்பு முறை, கீ ஆன்சர் வெளியிட்டது உள்ளிட்டவற்றில் பெருமளவு மோசடி நடந்துள்ளது.

    300 காலி பணியிடத்திற்கு 354 பேரை சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்துள்ளனர். இது சட்டவிரோதம். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என இதுவரையில் 5 பட்டியல் வெளியிட்டுள்ளனர். முறைகேடு நடந்துள்ளதால் உரிய கட் ஆப் மதிப்பெண்ணை என்னால் பெறமுடியவில்லை. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலையும், தேர்வுக்கான அறிவிப்பையும் ரத்து செய்து உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி கே.சசிதரன் விசாரித்தார். மனு குறித்து டிஆர்பி உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

    2 comments:

    Unknown said...

    Pesama First listla ullavangalayai posting pottu irukalam. pass panni oru varusam akium posting podama yengala saga vikuranga..illana listla ulla yellorukum posting podunga. indha problem solve. 100 scholl upgrade andhunala 100 posting increase agi irukanga.

    Anonymous said...

    I am M.COM., B.ED I GOT 103 MARKS IN PG TRB, NOW AFTER REVALUATION I GOT ONLY 101 MARKS. KEY ANSWER WRONLY PUBLISHED BY TRB. ENNA CASE POTTALUM TRB SOLLARATHU THAN ANSWER. CORRECT ANSWER KODUKATHU TRB MISTAKE.QUESTION DELETE SEITHATHAL ENATHU MARK KURAINTHU VITATHU. NEXT TIME SET CORRECT ANSWER FOR QUESTIONS.