Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 14, 2014

    12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம் அமைச்சர் வீரமணி தகவல்

    திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் வீரமணி கூறினார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி தலைமை வகித்தார்.


    பள்ளிக் கல்வி துறை முதன்மைச் செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பேசியதாவது:
    கல்விக்காக அனைத்து திட்டங் களையும் விலையில்லாமல் முதல்வர் செய்து வருகிறார். குறிப்பாக, கட்டணமில்லா கல்வி, விலையில்லா மடிக் கணினி, புத்தகம், பை, வண்ண கிரையான்கள், சீருடை, பேருந்து பயண அட்டை, உயர் கல்விக்கு ஊக்கத் தொகை என அனைத்துமே இலவசமாக வழங் கப்படுகின்றன. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு முழுமையான கல்வி வழங்க கல்வி அலுவலர்கள், தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும்.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், நல்ல தேர்ச்சி விழுக்காடு இருந்தது. எனினும், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் சற்று பின்னடைவைச் சந்தித்தன. இந்நிலையை மாற்றிட சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விழுக்காட்டை அதி கரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசு 53,218 ஆசிரியர் களை நியமித்துள்ளது. மேலும்,1,367 முதுகலை பட்டதாரி ஆசிரி யர்களும் 11,321 பட்டதாரி ஆசிரி யர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளையும்புதிதாக ஐந்து பகுதிநேர நூல கங்கள் திறப்பதற்கான ஆணை களையும், சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகளையும் அமைச்சர் வீரமணி வழங்கினார்.


    இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன்,தொடக்க கல்வி இயக்கு நர் இளங்கோவன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை மற்றும் பள்ளிக் கல்வி துறை அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

    4 comments:

    Unknown said...

    Male bc botan y wt 59.5 ,job kidaikuma pl reply

    Anonymous said...

    Nearly 6 months gone for the tamil pg teachers.but i lost my private job due to the pg final list which published in feb month.i need job for fulfill my basic needs of my family.kindly give appointment within this month.

    Unknown said...

    நண்பர்களே கடந்த 2013 tet exam இல் பாஸ் ஆனவவார்களில் சிலர் போஸ்டிங்க்கு தேர்வாகி உள்ளனர், ஆனால் பலர் போஸ்டிங்க்கு தேர்வாகாமல் உள்ளனர்.எனவே மீதி உள்ள tet pass நபர்களுக்கு வேலை கொடுத்த பின்தான் அரசு அடுத்த tet அறிவிக்க வேண்டும். இல்லாவிடில் எப்பொழுதும் இவர்களுக்கு வேலை கிடைக்காது.ஏனெனில் இவர்கள் தற்போதுள்ள வெய்டேஜ் முறை படி தங்களது 12,b.ed,d.ted.மதிப்பெண்களை மாற்ற இயலாது.

    Anonymous said...

    BOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    * மேலும்,இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

    *நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222
    *வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354
    * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....

    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608