Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 20, 2014

    12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல்

    ''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.

                                          
    பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது: அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 4ம் இடத்தில் இருந்த விருதுநகர் 5வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 11 க்கும்; 21ல் இருந்த திண்டுக்கல் 22 க்கும்; 17ல் இருந்த தேனி 25ம் இடத்திற்கும் சென்றுள்ளன. இதை சரிசெய்ய வேண்டும். அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.

    8 comments:

    Anonymous said...

    Nirapuvom nirapuvom yentu 1 varusama puchandi kattureengale thavira nirapura mathiri illa arikai viduratha niruthi seyalla kattunka ayya

    Anonymous said...

    Sec grade pathi pesave mategala inum yetha varusam agum posting poda

    Anonymous said...

    When is the second list for BT? Varru hanna varathu!ha!Ha! )::::::::

    Anonymous said...

    Nila, nila va va ! BT second list kondu va va !!, annatheya nikkiro nango ketka nathi illama nanka. Nanka Minority !!!!

    Anonymous said...

    please select the BT teachers as per seniority for particular year. if the candidate passed in TET exam then select the teachers with their seniority, because there are the curriculam they studied is different with the current.For example there is even no internal mark in their degree level in some years ago. but this they there are several colleges are autonomous so they give the full internal(25) for their students so current students have more percentage in their degree level.And in +2 level for several years ago there is only 1000 number of students are get above 1000 marks in TN state, but nowadays there are 1000 students get above 1000 marks in every district.So we can not compare the students with before 10 or 20 years back candidates.So please cancel the weightage system and follow the PG TRb and college TRB method.Wecan follow the weightage system for samacheer kalvi students.Even in college trb there is a difference b/w before 93 M.Phil and after 93 M.Phil.

    Anonymous said...

    paper 1 ku selection list vitanum.. paper 2 ku second list vitanum...appuram than pani niyamanam..kva intha velaiyellam mutikkama enna pani niyamanam?

    Anonymous said...

    ஒரு தேர்வு நடைபெறும் போது வெளியிடப்படும் அறிவிக்கை தேர்வில் வெற்றி பெற தேவையான மதிப்பெண்களை வெளியிடப்படும். அவ்வாறு தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். கிளார்க் பணி முதல் I.A.S பணி நியமனம் வரை இப்படித்தான் தேர்வு செய்கின்றார்கள்.ஆனால் TRB -தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களைதேர்வு செய்துவிட்டு,பிறகு ஒரு G.O. NO .71,என ஒன்றைக் கொண்டு வந்து குழப்பத்தை உண்டாக்கியது.I.A.S பணி நியமனத்தின் போதுதேவையானநபர்களைதேர்வு செய்துவிட்டு பிறகு ஒரு G.O. போட்டு மதிப்பெண் வழங்க முடியுமா? அப்படிசெய்தால் I.A.S தேர்வு எழுதியவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? TET க்கு ஒரு நீதி I.A.S க்கு ஒரு நீதியா.நீதிமான்களே! சிந்திப்பீர்! சரியான தீர்ப்பு வழங்குங்கள். நீதி வெல்லட்டும்!

    Anonymous said...

    G.O. NO .71, வெளியிடப்பட்ட நாள்.30.05.2014.TET தேர்வு நாள் .17.08.2013,மற்றும்18.08.2013