கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின், சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்தபின் கடன் வழங்க அமெரிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டில் உள்ள சிறிய நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் "பேஸ்புக், டிவிட்டர்" சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளில் சுய விவரத்தில் கூறப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு, அவர்களுக்கு கடன் வழங்கலாமா என்பது குறித்து முடிவு செய்கின்றன; தற்போது பெரிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும், இந்த முறையை பின்பற்ற துவங்கியுள்ளன.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் இந்த அணுகு முறைக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள், சமூக வலைத்தளங்களில், தங்களுடைய சுய விவரங்களை புதுப்பிப்பதில்லை; எனவே, அவர்கள், பணிமாற்றம் செய்து இருந்தாலோ அல்லது பணியில்லாமல் இருந்தாலோ வங்கிகளுக்கு தெரியாது; வாடிக்கையாளரின் பெயரில், போலி கணக்கு துவங்கப்பட்டு இருந்தாலோ அல்லது பொய்யான தகவல்களை அளித்திருந்தாலோ, கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள், வங்கிகளின் புதிய அணுகு முறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment