திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் பைரவரத்தினம். இவர் கடந்த 9-ம் தேதி பள்ளிக்கு வரும் வழியில் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையொட்டி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் நேற்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment