Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 12, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி, அந்தச் சட்டத்தினை 1994 ஆம் ஆண்டு அரசமைப்பு (76 ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், என்னையுமே சாரும்.

    இதே போன்று, ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப் படவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். மத்திய அரசின் உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களையே ஆசிரியராக நியமிக்க இயலும். எனவே, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் 18,647 ஆசிரியர்கள் மற்றும் போட்டித் தேர்வின் மூலம் 2,273 ஆசிரியர்கள் என மொத்தம் 20,920 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது, பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு தான். கல்லூரி ஆசிரியராக பணியமர்த்தப்பட ‘ஷிலிணிஜி’ மற்றும் ‘ழிணிஜி’ தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதோ, அதே போன்று தான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் மத்திய அரசால் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இந்த ஆசிரியர் நியமனத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை கருணாநிதிக்கு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    2014 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் அ.தி.மு.க. கொள்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் சூழ்நிலை உருவாகும் போது, உச்ச நீதிமன்ற ஆணையினை மாற்றும் வகையில் உரிய திருத்தங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    மொத்தத்தில், “அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு” என்ற பழமொழிக்கேற்ப கருணாநிதியின் அறிக்கையை படித்துப் பார்த்தால் அத்தனையும் புளுகு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: