"நாளைய உலகம் இளைஞர்களுக்கானது. எனவே, அதை அழித்திட யாரையும் நீங்கள் அனுமதிக்க வேண்டாம்" என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
சேலம், நேசக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் இயற்கை உணவு மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பங்கேற்று பேசியதாவது:
"இயற்கை என்னும் பேராற்றலில் நாமும் ஒரு அங்கம். எனவே, இயற்கையை பேணி பாதுகாத்து வருவோமானால் அதுவும் நம்மை பாதுகாக்கும். நாளைய உலகம் இளைஞர்களுக்கானது. எனவே, அதை அழித்திட யாரையும் நீங்கள் அனுமதிக்க வேண்டாம்.
எளிமையாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் எதிர்பாராது வரும் ஆபத்துக்களை எதிர் கொள்ளத்தக்க முன்னேற்பாட்டுடனும், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்திடவும் கற்றுக் கொள்ள வேண்டும். என்றைக்குமே நேற்று என்பதோ, நாளை என்பதோ கிடையாது. எப்போதுமே இன்று மட்டுமே உள்ளது. இதை அறிந்து, இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment