முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ் பாடத் தேர்வு வினாத்தாளில் 40 க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, 2770 பேர் அழைக்கப்பட்டு, கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாககடந்த 24ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில் வரும் 5 மற்றும் 6ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில், தற்போது அழைப்புக் கடிதம் பெற்றவர்களுடன், ஏற்கெனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கேற்கலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.
4 comments:
When TNTET result
TNTET
கோர்ட்டே முடிவு வெளியிட தடை இல்லை என தெரிவித்த பின்னரும் TRB முடிவு வெளியிடாதது மாணவர்களின் கல்வி மீது அக்கரையின்மையை காண்பிக்கிறது.
முடிவு வெளியிட்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு CV நடத்தலாமே,
பின்னர் கோர்ட் தீர்ப்புக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தந்தால் அதன் அடிப்படையில் எளிதாக 90 கு கீழ் உள்ள குறைந்த எண்ணிக்கையுள்ள ஆசிரியர்களுக்கு மிக எளிதில் CV செய்யலாமே !!!
மாணவர்களின் கல்வியில் அக்கறை காண்பியுங்கள் !!!
10,12 மாணவர்களின் கல்வி மட்டும்தான் முக்கியமா ?
மற்ற மாணவர்களின் எதிர்காலம் என்னாவது.?
அவர்களின் கல்வி பாதிப்பு வரும் காலக்கல்வியும் மிக பாதிக்கும் .
TNKALVI அன்பரே தயவுகூர்ந்து எங்களின் கருத்தை TRB க்கு தெறிவித்து முடிவை விரைவில் வெளியிட வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் !!!
TNTET
கோர்ட்டே முடிவு வெளியிட தடை இல்லை என தெரிவித்த பின்னரும் TRB முடிவு வெளியிடாதது மாணவர்களின் கல்வி மீது அக்கரையின்மையை காண்பிக்கிறது.
முடிவு வெளியிட்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு CV நடத்தலாமே,
பின்னர் கோர்ட் தீர்ப்புக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தந்தால் அதன் அடிப்படையில் எளிதாக 90 கு கீழ் உள்ள குறைந்த எண்ணிக்கையுள்ள ஆசிரியர்களுக்கு மிக எளிதில் CV ெசய்யலாேம !!!
மாணவர்களின் கல்வியில் அக்கறை காண்பியுங்கள் !!!
10,12 மாணவர்களின் கல்வி மட்டும்தான் முக்கியமா ?
மற்ற மாணவர்களின் எதிர்காலம் என்னாவது.
அவர்களின் கல்வி பாதிப்பு வரும் காலக்கல்வியும் மிக பாதிக்கும் .
TNKALVI அன்பரே தயவுகூர்ந்து எங்களின் கருத்தை TRB க்கு தெறிவித்து முடிவை விரைவில் வெளியிட வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் !!!
Tntet result date pathi thernchkanum.pls call this number. They will help you friends. 04428272455,7373008134,7373008144
Post a Comment