Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 10, 2013

    இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை!

    ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.


    தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

    முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

             BASIC PAY                          =       4500
             DEARNESS PAY (D.P)        =       2250
             D.A. 166%                             =     11205
                                                               ___________
             TOTAL                                          17955
                                                               ____________
             (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

    ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

               BASIC                                 =      5200
               GRADE PAY                       =      2800
               P.P.                                    =        750
               D.A. 80%                             =      7000
                                                                  _________
               TOTAL                                        15750
                                                                  __________

    ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு 

                                  17955 - 15750 = 2205

    எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை  வெளியிடப்பட்டு வருகிறது.

    நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு 

    No comments: