சென்னையில் உள்ள ராணுவ பொறியியல் சேவை நிறுவனத்தில் 1985-ம் ஆண்டு பி.ஆர்.ஆனந்தகுமார் என்பவர் சர்வேயராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அவர் விசாகப்பட்டினத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆனந்தகுமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், கல்வி ஆண்டின் இடையில் பிறப்பிக்கப்படும் பணியிட மாற்ற உத்தரவை ஏற்க முடியாது என்று கூறி, அந்த உத்தரவை ரத்து செய்தது. இந்த நிலையில் 2012-ம் ஆண்டில் ஆனந்தகுமாருக்கு ஐதராபாத்துக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆனந்தகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
ஒரு ஊழியருக்கு பணியிட மாற்ற உத்தரவு இயல்பான நிலையில் வழங்கப்பட்டால், அதில் கோர்ட்டு தலையிடாது. உள்நோக்கத்தோடோ அல்லது தகுதியற்ற அதிகாரியால் வழங்கப்பட்டு இருந்தாலோ தான் அதில் கோர்ட்டு தலையிடும். ஆனால் அப்படிப்பட்ட முகாந்திரம் எதுவும் மனுதாரரின் மனுவில் காணப்படவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment