Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 23, 2013

    அரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.

    தமிழக அரசின் கடித எண்.8764 / சி.எம்.பி.சி /2012-1, நாள்.18.04.2012 பதிவிறக்கம் செய்ய...

    கடித எண்.8764 நாள் : 18.4.2012  பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.

    இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர்  தேர்வுநிலை/  சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.

            (பார்வை 2 இல் அரசாணை  270 நாள்.26.8.2010. உள்ளது.)

    இதன் படி சிறப்புபடி GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்ததால் இதனை பெற்றவர்கள் குறித்து நமது முந்தைய பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம். 1.8.2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அரசாணைப்படியான சிறப்புப்படியை டிசம்பர் 2010 வரை அனைத்துநிலை இடைநிலை ஆசிரியர்களும் பெற்றிருப்பர்.

      பின்னர் அரசாணை  23 நாள் 12.1.2011 இன் படி(பத்தி 4)   " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்று உள்ளது. 

            இவ்வாறு சிறப்புபடியினை தொடர்ந்துபெற அனுமதிக்கப்பட்டவர்கள், 1.1.2006 -க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களே.

            இதனையே கடித எண் .8764 நாள்.18.4.2012 இல்  " பார்வை இரண்டில் (அரசாணை  270) கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் (GRANTED TO SECONDARY GRADE TEACHERS)  மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு,      01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர்   தேர்வுநிலை/  சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.

    தணிக்கையில்

    தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பது  

    சார்ந்து நமது விளக்கம்:

    தணிக்கை தாளில் ஒரு பக்கத்தில் கீழ்காணும் வரிகள் உள்ளது:

    "கீழ்வரும் ஆசிரியர்கள் அரசாணை  எண். 270 நாள்.26.8.2010-ன்படி 1.8.2010 முதல் சிறப்புப்படியாக ரூ.500/- பெற்று வருகின்றனர். அரசு கடித எண். 8764/நாள் 18.4.2012  பத்தி 2 (இ ) இல் 1.1.2006 -க்கு முன்னர் தேர்வுநிலை/சிறப்புநிலை பற்றவர்களுக்கு மட்டுமே இச்சிறப்புப்படி அனுமதிக்கப்படவேண்டும் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் சிறப்புப்படி பெற தகுதியில்லை. 1.8.2010 முதல்  சிறப்புப்படி தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும்."என்று உள்ளது.

     இது தவறான புரிந்துகொள்ளுதலினால் எழுதப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம். 
                      
    இங்கு நமது விளக்கம்:

    இந்த தணிக்கைத் தாள்களில் பெரும்பாலும் 2009, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் தேர்வுநிலை முடித்தவர்களுக்கு தனிக்கைதடை என்று கூறியுள்ளதாக அறிகிறோம். 

     கடித  எண். 8764 ஐ,    இதற்கு  முன்னர் வெளியிடப்பட்ட G.O.270.Dt.26.8.10 மற்றும்  G.O.23 Dt.12.1.11 இல் கூறப்பட்டுள்ளவைகளை  பார்க்காமல் நடைமுறைபடுத்தியதால் தான் தணிக்கைதடை  என்று கூறுகின்றனர்.

    மிகவும் சுருக்கமான விளக்கம்:

    அரசாணை  270 நாள்: 26.8.10 இன் மூலம் அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1.8.2010 முதல் தனி ஊதியம் அனுமதிக்கப்பட்டது.

    அரசாணை  23 நாள்:12.1.11 இன் மூலம் தேர்வு/சிறப்பு நிலை பெற்று 9300-34800 + 4300 மற்றும் 4500 தர ஊதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு படி தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு சிறப்புபடிக்குப் பதிலாக தனி ஊதியம் வழங்கப்பட்டது.  இதனையே கடிதம் 8764 இல் 1.1.2006 -க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே இச்சிறப்புப்படி அனுமதிக்கப்படவேண்டும் என  தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் அரசாணை  23 இல் சிறப்புபடியை தொடர்ந்துபெற அனுமதிக்கப்பட்டவர்கள்.

    ============================================================

    அன்பு வேண்டுகோளும்   எங்களின்  ஆதரவும்:

    அரசாணைகளை நன்றாக படியுங்கள். எங்களுக்கு தெரிந்தவரை விளக்கமளித்துள்ளதாக நம்புகிறோம். மீண்டும் மீண்டும் பொறுமையாக படியுங்கள். நம் ஆசிரியர் சமுதாய நண்பர்களுக்காக அதிக நேரம் செலவு செய்து பதிவு செய்துள்ளோம். 

    அரசாணைகள் தெளிவாக உள்ளது. தைரியமுடன் இருங்கள். அரசாணைகளில் உள்ளவைகளை அறிந்து கொண்டால் எந்த தடை வந்தாலும் அரசாணைகளை வைத்து விளக்கி நாம் பெற்ற பயன்களை தொடர்ந்து பெறலாம்.
    நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு 

    No comments: