மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கோரி, ராஜபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன், ஆர்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் முன்னிலை
வகித்தார். புதிய பென்சன் திட்டத்தை கைவிடுதல், அரசு பள்ளிகளில் தமிழ்வழி கல்வி தொடரவேண்டும், காலி இடங்களை நிரப்புதல், ஆசிரியர் தகுதி தேர்வில் மற்ற மாநிலங்களை போல இனவாரி இடஒதுக்கீடு முறை அமல்படுத்தவேண்டும் என்பது போன்ற, கோரிக்கைகளை, வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட துணைசெயலாளர் இளங்கோ, வட்டார மகளிர்அணி செயலாளர் சங்கரேஸ்வரி, நிர்வாகிகள் தவநிம்மதி, பச்சையாத்தாள் உட்பட பலர் பேசினர். வட்டார பொருளாளர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழக ஆசிரியர் கூட்டணியினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment