தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள் சென்னையில் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் மாநில தலைவர் டி.ரவிச்சந்தர், பொதுச்செயலாளர் டி.தேவி செல்வம், தலைமை நிலையச் செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிரேட்-1, கிரேட்-2 உடற்கல்வி பணியிடங்களை உயர்த்த வேண்டும், உடற்கல்விக்குப் பாடப்புத்தகம் வழங்க வேண்டும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் எம்.பில். ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், இணை இயக்குநர் - உடற்கல்வி பணியிடத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment