Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 10, 2013

    ஆகாயத்தைத் தொடும் வளர்ச்சி தரும் ஆராய்ச்சி துறை

    ஓவ்வோரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட துறைகள் முன்னோக்கிச் செல்வதாக மாணவர்களாலும், பெற்றோர்களாலும் கருதப்பட்டு படிக்கும் பாடப்பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நிலையான வளர்ச்சியும் பெரும் புகழும், வரலாற்றில் தம் பெயரை இடம்பெற வைப்பதற்கு துணை புரியும் துறை ஆராய்ச்சி துறை தான்.

    நாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் பாடங்கள், வேலைக்கு தயார்படுத்தும் தேர்வுகளின் கேள்விகள், உபயோகப்படுத்தும் வீட்டு உபகரணங்கள், போக்குவரத்து, கட்டிடம் என நம் வாழ்வில் காணும் எல்லாவற்றையும் தனது பரந்த கரங்களால் பிணைத்து கொண்டிருப்பது, ஆராய்சியாளர்களின் உழைப்பால் உருவான கண்டுபிடிப்புகளின்  சாராம்சமே. 

    ஆராய்ச்சி, ஆராய்ச்சியாளர்கள் என்றாலே ஆய்வகங்கள், ரசாயனம் என்று மக்களால் உருவகப்படுத்தப்பட்ட நிலை மாறி, அவற்றையும் கடந்து சாதனை புரிபவர்களை ஊக்கப்படுத்தும் மன நிலை மக்கள் மத்தியில் இன்று அதிகரித்துள்ளது.

    ஏனெனில் ஆராய்ச்சி என்பது பரந்து விரிந்த விண்வெளி, பெரும் வாகனங்கள், ஆச்சரியம் தரும் ஆழ்கடல் அதிசயங்கள், இயற்கையின் வெளிப்பாடுகள், கடந்த கால வரலாற்றை அறியும் தொல்லியல் ஆராய்ச்சிகள் மட்டும் அல்ல; நாம் அணியும் சட்டையின் வடிவமைப்பு, காலணிகளின் வடிவமைப்பு, சமையலறைப் பொருட்களின் மேம்பட்ட வடிவங்கள், அமரும் இருக்கைகளின் வடிவங்கள் என நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே ஆராய்ச்சியின் விளைவாக பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் பயன்கள் என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.

    இப்படிப்பட்ட ஆராய்ச்சி துறை குழந்தைகளால் சிறு வயதில் விருப்பத்தில் கொள்ளப்பட்டாலும், நாளடைவில் பலரும் அந்த எண்ணங்களை மறந்து விடுகின்றனர். இதற்கு பெற்றோரும் ஒரு காரணம். ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் என்றாலே அவர்கள் சமூகக் கட்டமைப்போடு ஒட்டாமல் அமைதியாக, தன்னந்தனியே தூக்கம், தண்ணீர் இன்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் என நினைப்பது தான்.

    யாரோ ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் எல்லாத் துறையிலும் இருகிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறை மாணவர்கள் ஆராய்ச்சி துறையின் தேவைகள், தங்கள் செயல்பாடுகள், தங்கள் தேவைகள் போன்றவற்றை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் தற்போது ஆராய்ச்சி துறையை தங்கள் எதிர்காலமாக தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    உலகில் இந்தியர் இல்லாத  ஆராய்ச்சி மையங்களே இல்லை, என்று கூறும் அளவுக்கு உலகம் முழுவதும் இந்திய மாணவர்கள் சென்று ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் ஆராய்ச்சியின் தேவையை உணர்ந்து அரசும், பெரிய உற்பத்தி நிறுவனங்களும், நிறுவன மற்றும் சமூக முன்னேற்றம் நிலை பெற ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்தி இத்துறைக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.

    ஆராய்ச்சியாளர்கள் பெறும் ஊதியம்

    சிறப்பாக இயங்கி வரும் துறைகளான மின் வணிகம், தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, வாகனத்துறை, நுகர்வோர் பொருட்கள் துறை போன்றவற்றில் ஆராய்ச்சி பணியில் இணைந்த புதிதில் வருடத்திற்கு சராசரியாக ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரையிலும், சில வருட ஆராய்ச்சி சாதனைகளுக்குப் பிறகு வருடத்திற்கு ரூ. 15 முதல் ரூ. 50 லட்சம் வரையிலும், பல வருட ஆராய்ச்சி சாதனைகளுக்குப் பிறகு ரூ. 70 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலும் ஊதியமாக பெறலாம்.

    ஊதியத்தோடு மட்டுமல்லாமல், கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மனித குலத்திற்கே நன்மை உண்டாக்கும் விதமாக இருக்கும் என்பதோடு, "சாதனையாளர்" என்ற பெரும் பட்டத்துடன் வரலாறு ஆராய்ச்சியாளர்களை பதிவு செய்யும் என்பதும், ஆராய்ச்சித் துறைக்கு கிடைக்கும் பெருமையாகும்.

    No comments: