"உலகளவில், தரம் வாய்ந்தது என பெயர் பெற்றிருந்த, அண்ணா பல்கலையின் தரத்தை குறைக்கும் வகையில், தி.மு.க., அரசு செயல்பட்டதால், பிற பகுதிகளில் துவங்கப்பட்ட அப்பல்கலைக் கழங்கள் ஒன்றிணைக்கப்பட்டன" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
சட்டசபையில், உயர்கல்வித் துறை மானிய கோரிக்கையின் மீது, நேற்று நடந்த விவாதம்:
கோ.வி.செழியன் (தி.மு.க.,): தமிழகத்தின் கடைகோடி பகுதியில் உள்ளவர்களுக்கும், தொழில் கல்வி கிடைக்க வேண்டும் என, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில், அண்ணா பல்கலையை, தி.மு.க., அரசு உருவாக்கியது.
இதன்மூலம், கிராமப்புற மாணவர்கள், ஆய்வு மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைக்காக, சென்னைக்கு வராமல், அந்தந்தப் பகுதிகளில் கல்வியைத் தொடர, இப்பல்கலைக்கழகங்கள் உதவியாக இருந்தன. ஆனால், அவற்றை ஒன்றிணைத்து விட்டனர்.
உயர்கல்வித் துறை அமைச்சர்: அண்ணா பல்கலைக்கழகம், உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக விளங்கியது. அதன் தரத்தைக் குறைக்கும் வகையில், மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில், அண்ணா பல்கலைக் கழகங்களை, சுய லாபத்துக்காக, தி.மு.க., அரசு துவங்கியது.
புதிய பல்கலைக் கழகங்களுக்கு, எவ்வித அடிப்படை வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை. மதுரையில், பஞ்சாலை ஒன்றில், அண்ணா பல்கலைக்கழகம் இயங்கியது. கோவையிலும், பல்கலைக்கழகத்துக்கு இடம் இல்லை. இந்நிலையில், அண்ணா பல்கலையின் தரத்தை பாதுகாப்பதற்காக, ஒன்றிணைத்தோம்.
கோ.வி.செழியன்: இடஒதுக்கீடு அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடப்பதில்லை. ஆதிதிராவிட மாணவர், அதிக மதிப்பெண் பெற்று, பொது இட ஒதுக்கீட்டுக்கு வந்தால், ஆதிதிராவிட பிரிவில் ஒரு இடத்தை குறைக்கின்றனர்.
உயர்கல்வி அமைச்சர்: அரசு வகுத்துள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா: மாணவர்களை, தி.மு.க., அரசு பாதுகாத்தது போல குறிப்பிட்டுகிறார். சென்னை கல்லூரியில், மாணவர்களை விட்டே, மாணவர்களை அடிக்க வைத்து, போலீசாரை வேடிக்கை பாக்க வைத்தனர். மாணவர்கள் குற்றுயிரும், குலை உயிருமாக, உயிரே போகின்ற அளவுக்கு அடிக்கப்பட்டனர். இந்த லட்சணத்தில் தான், மாணவர்களை பாதுகாத்துள்ளனர். இவ்வாறு, விவாதம் நடந்தது.

No comments:
Post a Comment