Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 21, 2013

    உதவியின்றி தவிக்கும் இலவச பள்ளி 220 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

    தெற்கு டெல்லி, மெஹருலி மாவட்டத்தில் செயல்படும் மவுன்ட்டேபர் தொடக்க பள்ளி, சந்தன் ஹுல்லாவைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கும் நோக்கத்தோடு 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
    ஆரம்ப காலத்தில் வெறும் 40 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் இன்று 220 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பகுதியைச் சுற்றி 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இங்கு உள்ள மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள சிரமப்பட்ட காலகட்டத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது.இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அதன் நிர்வாகிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று கல்வியின் தேவையையும், அவசியத்தையும் பெற்றோர்களிடம் எடுத்து உரைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதாக பெற்றோர்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணிகள், மதிய உணவு என்று அத்தனையும் இலவசமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தலைநகர் டெல்லியில் உள்ள 1.6 கோடி மக்கள் தொகை யில் 86 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். இதில் ஆண்கள் 91 சதவிகிதமும், பெண்கள் 80 சதவிகிதமும் உள்ளனர். டெல்லியின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல் ஜுக்கி எனப்படும் குடிசைப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த ஜுக்கிகளில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குடிசைப் பகுதி மக்கள் தொகையில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஆகும். இந்நிலையில், ஒரு நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியிலிருந்து இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு நடுநிலைக் கல்விக்காக மற்ற பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில் படித்து முடித்து வேறு பள்ளிக்கு சென்றாலும்கூட அந்த குழந்தைகளுக்கும் முடிந்தளவு பொருளாதார உதவி செய்யப்படுகிறது.இப்படி சேவையில் ஈடுபட்டுவரும் இந்த பள்ளி அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது. இப்போது நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது. இங்கு படிக்கும் 220 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. குழந்தைகளுக்கு 2 ஆண்டாக புத்தகங்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போதுமான இடவசதி இல்லை. நிர்வாகத்தால் வேலை செய்யும் ஆசிரியைகளுக்கு சம்பளம் கொடுக்க வசதி இல்லை. மதிய உணவுக்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களுக்கான செலவும் அதிகரித்து விட்டது.இந்த பள்ளியை நடத்தி வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொன்னாச்சன் யோஹன்னான், அடிப்படையில் ஒரு எலட்ரிகல் இன்ஜினியர். ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், சமூக சேவையில் ஆர்வம் கொண்டு தனது மனைவியோடு சேர்ந்து இந்தப் பள்ளியைத் துவங்கினார்.

     தனது சிறிய சேமிப்பை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்தப் பள்ளியைத் துவங்கியவருக்கு எந்த ஒரு நிதி உதவியும் இன்றுவரை கிடைக்கவில்லை. தனது வீடு, நிலம் என அத்தனையையும் விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தில் பள்ளியை நடத்திக் கொண்டிருந்தார். இப்போது அனைத்தும் தீந்துவிட்ட நிலையில் 220 மழலைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து விழி பிதுங்கி நிற்கிறார்.பொன்னாச்சான் யோஹன் னான் கூறியதாவது:கேரளாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வந்தேன். பள்ளி இல்லை. கல்வி கற்பதற்காக பக்கத்து ஊருக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும். வறுமை ஒருபுறம் வாட்ட, வைராக்கியத்தோடு பள்ளிப் படிப்பை முடித்தேன். தொடர்ந்து எலக்ட்ரிகல் என்ஜினியரிங் சான்றிதழ் படிப்பை முடித்து டெல்லியில் தனியார் நிறுவனத்தில் சேர்ந்தேன். நான் தங்கியிருந்த பகுதியைச் சுற்றி நிறையக் குடிசைகள் இருந்தன. அந்த குழந்தைகளுக்கு ஏதாவது உபயோகமாகச் செய்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் முடிவுவாக இன்று இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பள்ளியை நடத்தி வருகிறேன். அரசாங்கத்திடம் உதவிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்ப்பட்டன. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் எனது நம்பிக்கையை நான் இழக்கவில்லை. தொடர்ந்து போராடுவேன் என்றார்.

    No comments: