திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், ஹைபிரிட் கார் தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Wednesday, August 31, 2016
பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான மின் பணியாளர் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
"எலைட்" திட்டத்தால் ஆசிரியர்கள் குழப்பம் : கலெக்டர், கல்வி அதிகாரிகள் மாறி மாறி உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கலெக்டரும், கல்வி அதிகாரிகளும் மாற்றி மாற்றி உத்தரவிடுவதால், யார் உத்தரவை பின்பற்றுவது என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பில் சேர்க்க, 'எலைட்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி,
கடந்த கல்வி ஆண்டில், சில மாணவ, மாணவியர் அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது. இந்த தேர்வு, மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.
கல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்!
கல்லுாரிகளுக்கான, உயர் கல்வி தேசிய மதிப்பீடு தரவரிசை முறையில், திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் தேர்ச்சி, உட்கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதிகள் ஆராய்ச்சி அடிப்படையில், தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
சித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா?
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை, 29ல் முடிந்தது; 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா; மும்பை மாநகராட்சி அதிரடி
மும்பையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், சி.சி.டி.வி., எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது.
Tuesday, August 30, 2016
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்
விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியை ரூ.246லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டுமென்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும் அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட இரண்டு வருட போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். தொழிலாளர் ஒப்பந்த சட்டம் மீதான புகார்கள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுத உள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஜெட்லி கூறினார்.
மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய மனித வள மேம்பாட்டு பிதாமகர் மாஃபா.க.பாண்டிய ராஜன் .
MaFoi க.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி- சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.
Monday, August 29, 2016
பள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
*தமிழக அமைச்சரவை மாற்றம், சண்முகநாதன் நீக்கப்பட்டுள்ளார்.
*கே.பாண்டியராஜன் பள்ளிக்கல்விதுறை அமைச்சராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், வாய்ப்பின்றி, காத்திருக்கின்றனர். தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு, கணினி அறிவியல் பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில், கணினி அறிவியல் கல்விக்கென, பி.எட்., படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்!
தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.
விதிமீறலை தடுக்க குறைதீர் அதிகாரி; அண்ணா பல்கலைக்கு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு!
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என, அண்ணா பல்கலைக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்! -பிரதமர் கோலாலம்பூர்
கணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார். ஆரம்பப் பள்ளி (KSSR) மற்றும் இடைநிலைப்பள்ளி (KSSM) ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் அவை கட்டம் கட்டமாக இணைக்கப்படும் என்று இன்று பிரதமர் அறிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை
பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; வடக்கு, கிழக்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து, தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதால், டெங்கு காய்ச்சலும் பரவ துவங்கியுள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்
தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.
ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு
''உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
'கேட்' தேர்வு செப். 1ல் பதிவு
ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்
அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.
பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்
மதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வுகள்) அமுதவள்ளி தலைமை வகித்தார்.
'இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி
வளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட் இன்ஜினை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன் மூலம், புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமை, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
Sunday, August 28, 2016
Friday, August 26, 2016
பன்னிரெண்டாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்டவணை
12.9.16 - TAMIL I PAPER
13.9.16 - BAKRITH HOLIDAY
14.9.16 - TAMIL II PAPER
15.9.16 - ENGLISH I
16.9.16 - ENGLISH II
பத்தாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்டவணை
08.9.16 - தமிழ் I
10.9.16 - தமிழ் II
12.9.16 - ENGLISH I
14.9.16 - ENGLISH II
Thursday, August 25, 2016
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - மணி.கணேசன்..
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும்முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
கட்டாய இடமாற்றம்
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
Wednesday, August 24, 2016
பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு
முதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். முதலியார்பேட்டையில் அர்ச்சுண சுப்ராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 353 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.
தேவையை விட அதிக ஆசிரியர்கள்; கவுன்சிலிங்கில் 4,000 பேர் ஏமாற்றம்!
தென் மாவட்டங்களில், தேவையை விட, பல மடங்கு ஆசிரியர்கள் பணியாற்றுவதால், கவுன் சிலிங்கில் மாறுதல் கிடைக்காமல், 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். அரசு பள்ளிகளில், திருநெல்வேலி, கன்னியா குமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களே, அதிகளவில் ஆசிரியர்களாக பணியாற்று கின்றனர்.
’பாரா மெடிக்கல்’ படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்தது ஏன்?
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு, நடப்பு ஆண்டில், 2,400 இடங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அடுத்ததாக, பாரா மெடிக்கல் எனப்படும், மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு, பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் - பிசியோதெரபி உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகள் உள்ளன.
தமிழை எளிதில் கற்க ’வீடியோ’ பாடம்; மாணவர்கள் மகிழ்ச்சி!
தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்.
வாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை
தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.
Tuesday, August 23, 2016
பள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: தமிழக அரசு மீது ஜி.ரா. குற்றச்சாட்டு
90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில், பள்ளிக் கல்வியையும் முழுவதுமாக தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர் எனக் குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜெயலலிதா
தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும்,
நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது
தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விளையாட்டுத் திறனுக்கு முக்கியத்துவம்
அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளின் விளையாட்டுத்திறனுக்கும், கல்வித்துறை முக்கியத்துவம் அளித்து போட்டிகள் நடத்த வேண்டும் என்பதை, செயல்திட்ட படைப்பின் மூலம் வெளிப்படுத்த, முன்வந்துள்ளது கோட்டமங்கலம் நடுநிலைப்பள்ளி.
ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு பள்ளி குழந்தைகளின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக தன்னார்வ அமைப்பு மூலம் டிசைன் பார் சேன்ஞ் என்ற போட்டியை தேசிய அளவில் நடக்கிறது.
இதில் சமூக பிரச்னை அல்லது மாணவர்களை சுற்றி நடக்கும் பிரச்னைகளில், ஏதேனும் ஒன்றுக்கு பள்ளிக்குழந்தைகள் மூலம் தீர்வு காணும் வகையிலான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும். சிறப்பாக உள்ள திட்டங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
போட்டியில், மாநில அளவில், நுாறு பள்ளிகள் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், தேசிய அளவில் ஐந்து பள்ளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், செயல் திட்ட வழிக்கற்றலின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது.இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் மேம்படுவதோடு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிந்தனையும் மேலோங்குகிறது.
உடுமலையில், எட்டு பள்ளிகள், குடிமங்கலத்தில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்துள்ளனர்.
இப்போட்டியில், கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளது. இங்கு, நடுநிலைப்பள்ளி குழந்தைகள் விளையாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவதை தேர்ந்தெடுத்துள்ளனர்.
கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் குறுமையப் போட்டிகளிலும் கூட இக்குழந்தைகள் பங்கேற்க வாய்ப்பில்லை. கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க முக்கியத்துவம் வழங்கும் கல்வித்துறை, இக்குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே இப்பள்ளி செய்து வரும் செயல்திட்டத்தின் கருப்பொருள்.
நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சியே இல்லாமல் இருப்பதால், திறன் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் முடக்கப்படுகின்றனர்.
இம்மாணவர்கள் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி செல்லும் பட்சத்தில், சீனியர் பிரிவில் விளையாடுவதற்கான வாய்ப்பே இவர்களுக்கு கிடைக்கும்.
அடிப்படையே தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முடித்து வரும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் விளையாட்டு பயிற்சியில் சேர முன்வருவதில்லை.
எனினும், ஒருசில குழந்தைகள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முன்வந்தாலும், அடிப்படையை கற்றுக்கொள்வதற்குள்ளேயே பத்தாம் வகுப்பு வந்துவிடும். இதனால் அடிப்படை வகுப்பு முதலே, குழந்தைகளின் விளையாட்டுத்திறனையும் மேம்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தினரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்பள்ளி அதை வெளிப்படுத்தும் விதமாக செயல்திட்டத்தை தேர்ந்தெடுத்து, படைப்பாக வெளிப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு பள்ளி குழந்தைகளின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக தன்னார்வ அமைப்பு மூலம் டிசைன் பார் சேன்ஞ் என்ற போட்டியை தேசிய அளவில் நடக்கிறது.
இதில் சமூக பிரச்னை அல்லது மாணவர்களை சுற்றி நடக்கும் பிரச்னைகளில், ஏதேனும் ஒன்றுக்கு பள்ளிக்குழந்தைகள் மூலம் தீர்வு காணும் வகையிலான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும். சிறப்பாக உள்ள திட்டங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
போட்டியில், மாநில அளவில், நுாறு பள்ளிகள் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், தேசிய அளவில் ஐந்து பள்ளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், செயல் திட்ட வழிக்கற்றலின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது.இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் மேம்படுவதோடு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிந்தனையும் மேலோங்குகிறது.
உடுமலையில், எட்டு பள்ளிகள், குடிமங்கலத்தில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்துள்ளனர்.
இப்போட்டியில், கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளது. இங்கு, நடுநிலைப்பள்ளி குழந்தைகள் விளையாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவதை தேர்ந்தெடுத்துள்ளனர்.
கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் குறுமையப் போட்டிகளிலும் கூட இக்குழந்தைகள் பங்கேற்க வாய்ப்பில்லை. கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க முக்கியத்துவம் வழங்கும் கல்வித்துறை, இக்குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே இப்பள்ளி செய்து வரும் செயல்திட்டத்தின் கருப்பொருள்.
நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சியே இல்லாமல் இருப்பதால், திறன் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் முடக்கப்படுகின்றனர்.
இம்மாணவர்கள் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி செல்லும் பட்சத்தில், சீனியர் பிரிவில் விளையாடுவதற்கான வாய்ப்பே இவர்களுக்கு கிடைக்கும்.
அடிப்படையே தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முடித்து வரும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் விளையாட்டு பயிற்சியில் சேர முன்வருவதில்லை.
எனினும், ஒருசில குழந்தைகள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முன்வந்தாலும், அடிப்படையை கற்றுக்கொள்வதற்குள்ளேயே பத்தாம் வகுப்பு வந்துவிடும். இதனால் அடிப்படை வகுப்பு முதலே, குழந்தைகளின் விளையாட்டுத்திறனையும் மேம்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தினரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்பள்ளி அதை வெளிப்படுத்தும் விதமாக செயல்திட்டத்தை தேர்ந்தெடுத்து, படைப்பாக வெளிப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது; இதில், 54 ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் பலர், தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.
ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள் புறக்கணிப்பு!
ஊத்தங்கரை அருகே, அரசு தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இந்த பள்ளியில், 67 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியையாக காந்திமதி பணியாற்றி வருகிறார்.
மாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை!
பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு திறனாக்க தேர்வு; வாசிப்பு வசப்படுத்த கல்வித்துறை திட்டம்
அரசு பள்ளி மாணவர்களின் எழுத்து, வாசிப்பு, உள்வாங்கும் திறனை மேம்படுத்த, இரண்டாம் கட்ட திறனாக்க தேர்வு, பள்ளிகளில் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டம் அமலான பின், எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் செய்யப்படுகிறது. இவர்களுக்கு, பருவத்தேர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால், கற்றலில் மாணவர்கள் பின்தங்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இடைவெளியை நிரப்ப, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத்து, வாசிப்பு, சிந்தித்தல் திறனை வளர்க்க, திறனாக்க தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இனி எல்லாமே நெட்வொர்கிங் தான்!
இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மற்றும் நெட்வொர்கிங் துறைகளில் ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது!
Monday, August 22, 2016
அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்
முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல், வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை
வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்
மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Friday, August 19, 2016
பல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு
கல்லுாரி மற்றும் பல்கலைகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 33 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில், பெரும்பாலானவை, சீர்மிகு கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்து என, பல வகைகளில், மத்திய அரசிடம், பல கோடி ரூபாய் மானியம் பெறுகின்றன.
‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு பயிற்சி; தனியார் பள்ளிகளில் துவக்கம்
அடுத்த ஆண்டு, நீட் தேர்வு கட்டாயமாகும் நிலையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு முதல், நீட் எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது. இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வை அனுமதிக்காத மாநிலங்களில், அரசு கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமல், மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது.
உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., வெளியீடு
இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
கல்வி அதிகாரியை முற்றுகையிட்டுஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் அருகே கல்வன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் பாரதிதாசன். இவர் சில தினங்களுக்கு முன் நடந்த பணிநிரவல் கவுன்சிலிங்கில் சிவகங்கை அருகே தமறாக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் செலவாகும் ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும்: நாராயணசாமி
7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்துவதால் ஏற்படும் செலவு ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு நிதித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நடைபெற்றது. தலைமை செயலர் மனோஜ் பரிஜா, நிதித்துறை செயலர் டாக்டர் கந்தவேலு உட்பட நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் ஆசிரியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கிலம் கற்பித்தலில் புதிய முறை: விஐடியில் சர்வதேச கருத்தரங்கம்
வேலூர் விஐடியில் நடைபெற்ற ஆங்கில மொழி கற்பித்தலில் புதிய முறை குறித்த சர்வதேச கருத்தரங்கை சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலர் நீல் சர்க்கார் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பித்தலில் கையாளுவதற்கான புதிய முறைகளை உருவாக்குதல் குறித்த இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் இடை நீக்கம்
பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒரு தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். போளூரை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளித் தலைமை ஆசிரியையாக வளர்மதி (50) பணிபுரிந்து வருகிறார். இந்தப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட மாணவர்கள், பெற்றோர்கள் கடந்த திங்கள்கிழமை காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.
பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
ஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Army Public School (AWES APS)
பணியிடம்: இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள்: 8,000
Thursday, August 18, 2016
இந்தியாவுக்கு முதல் பதக்கம்; வெண்கலம் வென்றார் சாக்ஷி

வெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா!
மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் தனபால், உதவி இயக்குனர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சீருடை, கதர் ஆடையாக மாற்றப்பட உள்ளது; இதற்காக, 10 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
குரூப் - 1 தேர்வு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு
'குரூப் - 1' பதவிக்கான தேர்வில், நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின், 'ரேங்க்' பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு
பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் 18 லட்சம் பேர்! தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது
தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
கட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு
கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர்.
உயர் சிறப்பு மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன; இதற்கான கலந்தாய்வு, ஜூலை, 26ம் தேதி நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வெளி மாநில டாக்டர்களும் முதல் முறையாக பங்கேற்றனர்;
Wednesday, August 17, 2016
ஆசிரியர்கள் - கிராம இளைஞர்களின் கூட்டு முயற்சியால் தனித்துவமாய் இயங்கும் தேர்போகி அரசுப் பள்ளி

கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார வசதிகளும் ஏதும் இன்றி வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க முடியாத கட்டிடங்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளதால் மாணவர்களை சேர்க்கைக்கு தேடக்கூடிய சூழலுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள்.
சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா?
சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா? என பிஎட் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பள்ளிகளில் இல்லை நீதிபோதனை வகுப்புகள்!
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டும் விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் எந்த பள்ளியும் அதை செயல்படுத்தவில்லை. இதனால் மாணவர்களின் ஒழுக்கம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. முன்பு அனைத்து பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்திற்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைபிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன.
கல்வி உதவித்தொகை குளறுபடி - டி.இ.ஓ., விசாரணை
சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்தார். கடந்த சுதந்திர தினத்தன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் இன்று விடுமுறை, நாளை வாருங்கள் என தலைமை ஆசிரியர் ரத்தினக்குமார் கூறியுள்ளார்.
மாணவர்களை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்!
சென்னை ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு, அனுப்பப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என எஸ்.ஆர். சுப்ரமணியம் நற்பணி இயக்க பொதுச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு
தொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு
தொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம்; ஆசிரியர்கள் எதிர்ப்பு
உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.
’நீட்’ தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு; நான்கு லட்சம் பேர் தேர்ச்சி
மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில் சேர, நீட் என்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இத்தேர்வு, மே, 1ல் நடந்தது.
கணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்!
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. எளிமையான வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வினாத்தாள்கள், மிகவும் கடினமாக இருப்பதாக புகார்கள் வந்தன.
போதை ஆசிரியரை கண்டித்து பூட்டு போட்டு போராட்டம்
திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியரை கண்டித்து, மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே கருமாரப்பட்டி கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் உட்பட, ஆறு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்

பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுக்களை நீக்க அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்குதல் தமிழக சுகாதார துறை ஏற்பாடு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Tuesday, August 16, 2016
புதிய சட்டக்கல்லூரி கட்டடங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
புதிய சட்டக் கல்லூரிகளுக்கான கட்டடங்களுக்கு, நிதி ஒதுக்குவதற்கான அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சுவாரசியம் நிறைந்த ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!
தொழில்நுட்ப வளர்ச்சியில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் துறை ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!
விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை கணக்கிடுவது என்பது சாத்தியமற்றது. ஆனால், விண்வெளியில் உள்ள கோல்கள், அதன் வடிவங்கள், சுற்று வட்ட பாதைகள் உள்ளிட்ட எண்ணிலடங்காத அறிவியல் தகவல்களை கண்டறிந்து கணக்கிடுவது சாத்தியமான ஒன்று!
மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லுவை தவிர்க்க குறைதீர் நடுவர்
கல்லூரி மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கையில், தில்லுமுல்லு நடப்பதை தவிர்க்க, குறைதீர் நடுவரை நியமிக்க வேண்டும்’ என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
மாணவிகளை காப்பாற்றிய ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி... சுதந்திர தினவிழா சோகம்
தெலுங்கானாவில் சுதந்திர தினவிழாவுக்காக கொடிக்கம்பம் நட்டபோது மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதிலிருந்து 4 மாணவிகளை காப்பாற்றிய தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா கிராமத்தில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தலைமை ஆசிரியையாக பிரபாவதி என்பவர் பணியாற்றி வந்தார். சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை பள்ளியில் நடைபெற்றது. இதற்கான பொறுப்புகளை தலைமை ஆசிரியை பிரபாவதி கவனித்து வந்தார்.
இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள்!
*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை
*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை
*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.
*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்
மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கையை அரசு தயாரித்துள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிபோன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்றநிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது. இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிஉள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில்2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வுசெய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குரூப்-4 தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி:வயது சலுகை கோரிக்கை
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குரூப்-4 பிரிவில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6ல் எழுத்துதேர்வு நடைபெற உள்ளது. இதில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் தேர்ச்சிபெற்றவர்கள் பொதுப்பிரிவினர் 30ம், எஸ்.சி., எஸ்.டி., 35ம், பி.சி.,எம்.பி.சி., பி.சி.எம்., 32 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்;
திருவண்ணாமலையில் ஆக.19 முதல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி
அண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்;
Friday, August 12, 2016
ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு
அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு
பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும்.
மாணவியை அடித்த ஆசிரியர் கைது
உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை அடித்த ஆசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஜீவரட்சகர் (32) தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி அடித்தாராம்.
ஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
வந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Thursday, August 11, 2016
மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட தலைமை ஆசிரியர் பலி
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அருகே கல்யாணமந்தை வனத்துறை நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முனிரத்தினம், 56. இவர், கடந்த மாதம், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ஜமுனாமரத்துாரில் இருந்து, தன் சொந்த கிராமமான நாயக்கனுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பணிநிரவலில் விதி மீறினால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை.
தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கானபணிநிரவல் கலந்தாய்வில் விதிமீறல் நடந்தால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தஞ்சாவூர் அருகே பின்னையூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இரு ஆசிரியர்கள் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதாக இருவரும் மீதும் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Wednesday, August 10, 2016
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
''அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார். 'ஸ்மார்ட் வகுப்பு' வேண்டும்.
சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: தேசிய கல்விக் கொள்கை, மீண்டும் குலக்கல்வியை புகுத்துவதாக உள்ளது. அரசு பள்ளிகளை மூடும் நிலை உள்ளது.
17 மாவட்டங்களில் உடற்பயிற்சி மையம்
தமிழகத்தில், 17 மாவட்டங்களில், நவீன உடற்பயிற்சி மையங்கள் அமைக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைக்கப்படும் இம்மையங்கள், போட்டிகள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார். சட்டசபையில் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:
தொலைநிலை கல்வியில் ஒரே பாடத் திட்டம்
தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில், ஒரே பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். சட்டசபையில், உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் கே.பி.அன்பழகன், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:
கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு
சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர்.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள்; பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்
* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்.
* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்.
அரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்
தொடக்கப் பள்ளிகள்.
01. - 60. - 2
61. - 90. - 3
91. - 120. - 4
121. - 150. - 5
151. - 200. - 6
201. - 240. - 7
துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்
உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள கான்பூர் மாநகராட்சி சார்பில், 'துப்புரவு தொழிலாளர் பணிக்கு, 3,275 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 1,500 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மற்றவை, இடஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படவுள்ளன.
புதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்
'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
5,451 இடங்களுக்கு குரூப் - 4 தேர்வு
'குரூப் - 4 பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல், எழுத்துத்தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவை மற்றும் நில ஆவண துறை கள ஆய்வாளர், வரைவாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் என, மொத்தம், 5,451 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாற்ற மத்திய அரசு திட்டம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.
தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.
பி.எப்., கடன் வட்டி 8.1 சதவீதம்
தமிழகத்தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெற்ற கடன் தொகைக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, செப்., 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கல்விக் கொள்கை: மாநில உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசு உறுதி
புதிய கல்விக் கொள்கையில், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பேசியது: புதிய கல்விக் கொள்கை குறித்த வரையறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.
Tuesday, August 9, 2016
அதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை; தமிழக அரசு
இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க., நேற்று தான் தீர்மானம் அளித்தது. இது தனது பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார். இதனையடுத்து உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
அடுத்த ஆண்டு முதல் ’நீட்’; ஜனாதிபதி ஒப்புதல்
அடுத்த ஆண்டு முதல், நீட் எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். மருத்துவக் கல்லுாரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்&' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டே நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடந்தது.
'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வில்' அரசியல் பின்னணி
தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு என்றாலே ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். இதற்கு காரணம் தகுதி, சீனியாரிட்டி இருந்தாலும் விரும்பிய இடங்களை பெற பல லட்சம் ரூபாய்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கலந்தாய்வு என்றாலே காலிப்பணியிடங்கள் மறைப்பு, திரைமறைவு 'பேரம்', ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் என புகார்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது.
'நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமலாகாது'
'சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைஅமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியைச் சேர்ந்தவருமான உபேந்திரா குஷ்வாஹா பதிலளித்தார்.
Monday, August 8, 2016
மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157 சதவீதம் அதிகமாகும்.
சம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். கார்களை வாங்குவர். இதனால் ஆட்டோமொபைல் துறையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?
அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.
பயிற்சி தருமே வெற்றி!
“இதுவரை அனைத்து அரசு தேர்வுகளும் எழுதிப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு வேலை கிடைக்கல! ஆனால், நேத்து டிகிரி முடிச்சுவன், இன்னைக்கு வேலைக்கு போயிட்டான். எல்லாம் அதிர்ஷ்டம் சார்!” என பலர் அலுத்துக் கொள்வதை காண்கிறோம்.
ஆசிரியர் கழக அவசர பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக, அவசர மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
அரசு பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்
அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது. மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது.
சாதனை அரசு பள்ளிக்கு வெளிநாட்டினர் உதவி
கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வெளிநாட்டினர் உறுப்பினராக உள்ள, ரவுண்ட் டேபிள் அமைப்பு உதவி வழங்கியது. கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கோவை ரவுண்ட் டேபிள் எண், 9ன் சார்பில், இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. நான்கு வகுப்பறை களுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. இவை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது.
பதவி உயர்வை புறக்கணித்த ஆறு ஆசிரியர்கள்
ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று நடந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், ஆறு ஆசிரியர்கள் பதவி உயர்வை புறக்கணித்து, வியப்பை ஏற்படுத்தினர்.
பட்டதாரி ஆசிரியர்கள் 30ம் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி, ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் மாயோன், மாநில தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசு ஓய்வூதியம்157 சதவீதம் உயர்வு
ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம், 157 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்
புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க குறுகிய கால கடனை 50 ஆயிரமாக உயர்ந்துவது என, முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2528 ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் மத்திய கால கடனாக 8 லட்சம் ரூபாய், குறுகிய காலக்கடனாக 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
Saturday, August 6, 2016
அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?
அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.
சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்
அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொதுமாறுதல்கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல்கட்டாயமாக செய்ய உள்ளார்கள். அதில்
1)மாவட்டம் விட்டுமாவட்டம் பணி நிரவல் கிடையாது.
2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்படவேண்டியஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம்இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டியஆசிரியர்களுக்குஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம்விட்டுஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
Friday, August 5, 2016
தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு
அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது.
பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை
'பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன.
2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை
'உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள், எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வான, நீட் தேர்வு, மே மாதம் நடந்தது. பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வை தவற விட்ட மாணவர்களுக்காக, ஜூலை, 24ல் மீண்டும் நடந்தது. 'ஏற்கனவே முதல்கட்ட தேர்வை எழுதியோர் விரும்பினால், இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம்.
'டெட்' தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்
'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.
கல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்கள் பாதிப்பு
கல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (டிஎன்ஜிடிஎப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்
அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.
Thursday, August 4, 2016
புதுக்கோட்டையில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

EXPECTED D.A. FROM JULY 2016 - DEARNESS ALLOWANCE CALCULATION
There are three main factors which determine the increase in percentage of DA in every pay Commission.
1.DA CALCULATION FORMULA
2.AICPIN FOR INDUSTRIAL WORKERS
3. BASE AVERAGE INDEX
1. FORMULA FOR DA CALCULATION
EXPECTED D.A - 1
2. AICPIN for Industrial Workers
7வது ஊதியக் குழு பலன் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன், சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையை ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாத வருமானம் உயரும் என்பதால் ஊழியர்களுக்கு வீட்டுக் கடனை சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பிற பணியாளர்கள் ஆகியோருக்கு நீண்ட காலஅடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.
இயக்க குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறையுடன் இணைந்த முன்மாதிரி வகுப்பறை: வழிகாட்டியாக திகழும் மதுரை பள்ளி
நாட்டின் மக்கள் தொகையில் 2.2 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குழந்தைகள் எண்ணிக் கையில் 15 சதவீதம் பேர் இயக்க குறைபாட்டுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தபட்ச இயக்கக் குறைபாடுள்ள குழந்தைகள் மட்டுமே, சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். மூளை பக்கவாதம், தசை சிதைவு நோய் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட இயக்கக் குறை பாடுள்ள குழந்தைகள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி களில், அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதியுமின்றி கல்வி கற்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 290 ஆசிரியர்கள்: காலிப் பணியிடங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், உபரியாக உள்ள 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி?
உதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50 லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.
கவுன்சிலிங் தடை : முதல்வருக்கு மனு
பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர் சங்கங்கள் மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனரையும் சந்தித்து, மனு கொடுத்துள்ளனர்.
257 உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்
தமிழகத்தில் 257 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
பொதுமாறுதல் கலந்தாய்வு: தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
பொது மாறுதல் கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போல நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
குரூப் - 4 பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்
அரசுத் துறையில், குரூப் - 4 பதவிகளுக்கு, 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் அறிவிப்பு: குரூப் - 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்ய, 2014 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது.
ஏ.இ.இ.ஓ.,சீனியாரிட்டி பட்டியல் : 33 தலைமை ஆசிரியர்கள் நீக்கம்
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்காக தயாரிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலில் இருந்து 33 பேரை கல்வித்துறை நீக்கியது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுவதற்கான கவுன்சிலிங் நடக்கிறது.
Monday, August 1, 2016
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள் நடைபெற இருக்கிறது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற 5ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித் தரும் திட்டம் (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) சுருக்கமாக ஐ.சி.டி
பெரிய, பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரக்கூடிய வசதிகள் இருக்கின்றன. எனவே தனியார் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவில் திறமையானவர்களாக இருக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் திட்டத்தை (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.