Pages

Tuesday, August 23, 2016

பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை!

பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது.


அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பி.எட்., கல்லுாரி களில் உள்ள, 1,777 இடங்களுக்கு, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில் நேற்று, பி.எட்., கவுன்சிலிங் துவங்கியது. 

முதல் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடந்தது. மற்ற பாடங்களுக்கு, இன்று துவங்கி, 30ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படித்த இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒன்றை இன்ஜினியரிங்கில் பிரதான பாடமாக படித்திருக்க வேண்டும். 

இந்த ஆண்டு விலங்கியல் மற்றும் தாவரவியல் பிரிவுகளில், 100க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதால், இன்ஜி., பட்டதாரிகளுக்கும் உயிரியல் பி.எட்., படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.