Pages

Wednesday, August 17, 2016

கல்வி உதவித்தொகை குளறுபடி - டி.இ.ஓ., விசாரணை

சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்தார். கடந்த சுதந்திர தினத்தன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் இன்று விடுமுறை, நாளை வாருங்கள் என தலைமை ஆசிரியர் ரத்தினக்குமார் கூறியுள்ளார்.


இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. நேற்று தலைமை ஆசிரியர், உதவித்தொகை பொறுப்பு ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்களிடம் கல்வி அலுவலர் விசாரணை செய்தார்.

உதவித் தொகை வழங்கியவர், சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு பலருக்கு வழங்காமல் தாமதம் செய்துள்ளார் என தலைமை ஆசிரியர் புகார் கூறினார். தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக மற்ற மூன்று ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார் தெரிவித்தனர். விசாரணை முடிவில் உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும் என பெற்றோர்களிடம் தெரிவித்த மாவட்ட கல்வி அலுவலர், குளறுபடி தொடர்பாக மேலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறிவிட்டு சென்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.