சென்னை ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு, அனுப்பப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என எஸ்.ஆர். சுப்ரமணியம் நற்பணி இயக்க பொதுச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமிக்கு, அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேர்வின் அடிப்படையில் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்து, இந்திய ஆட்சிப்பணி முதல் நிலை மற்றும் பிரதான தேர்வுக்கான இலவச பயிற்சி (டி.ஐ.எம்.இ., ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சென்னை) அளிப்பதற்கு உண்டான கட்டணத்தொகையும், ஊக்கத்தொகையும், இந்த கழகத்தின் மூலம் புதுச்சேரி அரசு வழங்குகிறது.
இந்தாண்டு (2016-17) முதல், புதுச்சேரி அரசு, பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 20ல் இருந்து 50 ஆக உயர்த்தி உள்ளது மகிழ்ச்சியான செய்தி.
எனினும், புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிகம் இருப்பதாலும், இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க அதிகம் ஆர்வம் உள்ளதாலும், மாணவர்களின் எண்ணிக்கையை, மேலும் அதிகப்படுத்த வேண்டும்.
குறிப்பாக ஊக்கத்தொகையை தவிர்த்து, பயிற்சிக்கான கட்டணத்தை மேலும், 75 மாணவர்களுக்கு அளித்தால், பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் 125 மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.