Pages

Thursday, August 18, 2016

வெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா!

மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் தனபால், உதவி இயக்குனர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சீருடை, கதர் ஆடையாக மாற்றப்பட உள்ளது; இதற்காக, 10 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

காதி வாரியம் தயாரித்த, 30 லட்சம் காகித கோப்புகளை, பிரதமர் அலுவலகம் வாங்கியுள்ளது. ரயில்வே ஊழியர்கள், கதர் ஆடைகள் வாங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; இதற்காக, அத்துறையுடன் பேச்சு நடக்கிறது. தனியார் ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் ஆடை விற்பனைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
கேரளாவில் பள்ளி மாணவர்கள், கதர் சீருடை அணிய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் செயல்படுத்த கோரி, பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
மேலும், அனைத்து அரசு ஊழியர்களும், வெள்ளிக்கிழமை மட்டும், கதர் ஆடை அணிய உத்தரவிட வேண்டும் என, முதல்வர், தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.