Pages

Wednesday, August 10, 2016

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

''அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார். 'ஸ்மார்ட் வகுப்பு' வேண்டும்.
சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: தேசிய கல்விக் கொள்கை, மீண்டும் குலக்கல்வியை புகுத்துவதாக உள்ளது. அரசு பள்ளிகளை மூடும் நிலை உள்ளது.


அமைச்சர் பெஞ்சமின்: அரசு பள்ளி கள் எதுவும் மூடப்படவில்லை. புதிதாக பள்ளிகள் துவக்கப்பட்டு உள்ளன. அரசு பள்ளிகளில், 2011 - 12ல், 47 லட்சம் பேர் படித்தனர். 2015 - 16ல், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, 48 லட்சமாக உயர்ந்துள்ளது. பிரின்ஸ்: தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. அதேபோல், அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்க, 'ஸ்மார்ட் வகுப்பு' நடத்த வேண்டும்.
மிக குறைந்த சம்பளம்
ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம், 50 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும். மீதமுள்ள, 50 சதவீத பணியிடங்களை, பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். சுயநிதி கல்லுாரிகளில், விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு குறைந்தது, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள், லேப்டாப் போன்றவற்றை, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: கல்லுாரிகளில், பல்கலை மானிய குழு விதிமுறைகளின்படி, விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்காத கல்லுாரியை குறிப்பிட்டு தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.