கணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார். ஆரம்பப் பள்ளி (KSSR) மற்றும் இடைநிலைப்பள்ளி (KSSM) ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் அவை கட்டம் கட்டமாக இணைக்கப்படும் என்று இன்று பிரதமர் அறிவித்தார்.
இந்த முயற்சி, நாடு தழுவிய அளவிலுள்ள 10,173 பள்ளிகளில் பயிலும் 12 லட்சம் மாணவர்களுக்குப் பயன்தரும். அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் தொடங்கப்படும். இடைநிலைப்பள்ளிகளில் முதலாம் படிவம் தொடங்கி நான்காம் படிவம் வரையில் அடுத்த ஆண்டில் அடிப்படைக் கணினி அறிவியல் பாடம் ஆரம்பிக்கப்படும்.
இத்தகைய பாடத்திட்டம் ஏற்கெனவே பல நாடுகளில் ஆரம்பமாகி விட்டது. அதைத்தான் நாம் அறிமுகப்படுத்துகிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கணினி அறிவியல் அவர்களின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இணை க்கப்பட்டு விட்டது என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.
தென் கிழக்காசியாவில் அத்தகைய பாடத்தை கல்வித் திட்டத்தில் இணைப்பதில் மலேசியா முதல் நாடாக விளங்கவிருக்கிறது என்றார் அவர்.
இதே போல் இந்தியாவிலே தமிழகத்திலும் கணினிக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினிக் கல்வியை கொண்டவர வேண்டும் இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறுவர்கள்...
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.