Pages

Wednesday, August 24, 2016

அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

முதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். முதலியார்பேட்டையில் அர்ச்சுண சுப்ராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 353 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.


இதையேற்று, அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று திடீரென, சுப்ராய நாயக்கர் அரசு பள்ளியை ஆய்வு செய்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., கல்வித்துறை இயக்குநர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று ஆய்வு செய்த, அமைச்சர், ஆங்கிலப்பாடம் நடந்த வகுப்பில், மாணவர்களிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். பதில் கூறிய மாணவர்களை பாராட்டினார்.

பள்ளியில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார். கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்ததால், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.