தென் மாவட்டங்களில், தேவையை விட, பல மடங்கு ஆசிரியர்கள் பணியாற்றுவதால், கவுன் சிலிங்கில் மாறுதல் கிடைக்காமல், 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். அரசு பள்ளிகளில், திருநெல்வேலி, கன்னியா குமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களே, அதிகளவில் ஆசிரியர்களாக பணியாற்று கின்றனர்.
அதனால், இடமாற்றத் திற்கான கவுன்சிலிங்கில், தென் மாவட்ட காலியிடத் திற்கு, 100 ஆசிரியர்கள் போட்டி போடுவது வழக்கம். இதனால், காலியிடங்களின் விபரம் மறைக்கப்படுவதும் உண்டு. சிபாரிசு, பரிந்துரை அடிப்படையில், இந்த மாவட்டங்களுக்கு மட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு, ஆசிரியர் கவுன்சிலிங்கில், எந்த காலிடமும் மறைக்கப்படாது என, அறிவிக்கப்பட் டது. அதனால், தென் மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர்கள் நினைத்தனர்.
அதற்கு மாறாக, &'தென் மாவட்டங்களில் காலியிடங் களே இல்லை&' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இரு நாட்களுக்கு முன் நடந்த, இடைநிலை ஆசிரியர் களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கவுன்சிலிங்கில், 4,745 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும், 11 உடற்கல்வி ஆசிரியர்கள்மாறுதல் கேட்டனர்.
அவர்களில், 641 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமே, விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கிடைத்தது; மீத முள்ள, 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இவர்களில் பெரும் பாலானோர், தென் மாவட்டங்களுக்கு மாறுதல் கேட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, தென் மாவட்டங்களில், ஒவ்வொரு அரசு பள்ளி களிலும், மாணவர் எண்ணிக்கையை விட, பல மடங்கு அதிகமாக ஆசிரியர்கள் உள்ளதால், அங்குள்ள ஆசிரியர்களையே, வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.