இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மற்றும் நெட்வொர்கிங் துறைகளில் ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது!
இத்திட்டங்களால், ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க முன்வந்துள்ளன. இதன்மூலம், இந்தியாவில் 5 கோடி இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும்!
குறிப்பாக, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் நெட்வொர்கிங் துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இந்தியாவில் 100 நகரங்கள் நவீன மயமாக்கபட உள்ளன. இந்நகரங்களில் அனைத்து விதமான சேவைகளும் (பால், தண்ணீர், மின்சாரம், காய்கறிகள் ஆகிய அனைத்தும்) கணினி சார்ந்தே நடைபெறும்.
இவை அனைத்திற்கும் கம்பி வழி (wired) மற்றும் கம்பியில்லா (wireless) நெட்வொர்கிங் மூல ஆதரமாகும். ஆகையால், 2020களில் சாப்ட்வேர் இன்ஜினியர்களை விட நெட்வொர்கிங் இன்ஜினியர்களே அதிகளவில் தேவைபடுவார்கள்!
வரப்பிரசாதம்
நெட்வொர்கிங்போன்ற உயர் தொழில்நுட்ப கல்வியை இந்தியாவில் விரைவில் அறிமுகபடுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தங்களுடைய எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு, நெட்வொர்கிங் படிப்பு, ஒரு வரப்பிரசாதம்! இப்படிப்பை படிக்கும் போதே மைக்ரோசாப்ட், சி.சி.என்.ஏ., மற்றும் ரெட்ஹேட் போன்ற சர்வதேச சான்றிதழ்கள் பெறுவதன் மூலம் வெளிநாடுகளில் நெட்வொர்கிங் துறையில் எளிதில் வேலைவாய்ப்புகளை பெற்றிட உதவும்.
கல்வி நிறுவனம்
மதுரையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, 2010ம் ஆண்டிலிருந்து பி.எஸ்., நெட்வொர்கிங் என்ற 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை, முழுநேர படிப்பாக அளித்துக்கொண்டிருக்கிறது.
-ச.பாண்டிக்குமார், ஆராய்ச்சி மாணவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.