Pages

Saturday, August 6, 2016

அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?

அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.


அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கப்படுவது இல்லை. மேலும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்கள், வீட்டிலிருந்து, 7:00 மணிக்கே புறப்பட வேண்டும். மாலையில், சிறப்பு வகுப்பு முடித்து, 6:00 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இதனால், காலை உணவும் உண்ண முடியாமல், மாலையிலும் நீண்ட நேரம் பள்ளி யில் இருக்க வேண்டி யுள்ளதால், மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து, ஆசிரி யர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: சிறப்பு வகுப்பு நடத்தும் முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளிடம், கல்வி அதிகாரி கள் கருத்து கேட்டிருக்கலாம். மாணவர்கள் மயங்கி விழும் போது, ஆசிரியர்கள், தங்கள் பணத்தில் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர், தரமான, 'ஸ்நாக்ஸ்' கொடுத்து அனுப்புகின்றனர். பள்ளி கேன்டீனில் வாங்க, பணமும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த வசதிகள் இல்லை. எனவே, அரசு பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு, அரசு சிற்றுண்டி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.