கல்லுாரிகளுக்கான, உயர் கல்வி தேசிய மதிப்பீடு தரவரிசை முறையில், திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் தேர்ச்சி, உட்கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதிகள் ஆராய்ச்சி அடிப்படையில், தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலான, நாக் அமைப்பு மூலம், நான்கு வகையாக தரவரிசை வழங்கப்பட்டது. மிகச் சிறந்த கல்லுாரிக்கு, ஏ சிறந்த கல்லுாரிக்கு, பி - திருப்தியான கல்லுாரிக்கு, சி மற்றும் அதிருப்தி என்பதற்கு, டி என, தரவரிசை தரப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்த தரவரிசை ஏழு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏ பிளஸ் பிளஸ், ஏ பிளஸ், ஏ, பி பிளஸ் பிளஸ், பி, சி மற்றும் டி என, மாற்றப்பட்டுள்ளது. டி தரம் பெறும் கல்லுாரிகள், அதிருப்தி பட்டியலில் சேர்க்கப்படுகிறது. தற்போது, நாக் அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்ட தரவரிசை அப்படியே தொடரும். புதிதாகவும், புதுப்பிக்கவும் வரும் கல்லுாரிகளுக்கு, புதிய முறையில், கிரேடு தரப்படும் என, நாக் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறும்போது, நான்கு தர வரிசையில், மிக சிறந்த செயல்பாடு கொண்ட உயர்தர கல்வி நிறுவனங்களை தனியாக பிரிக்க முடியவில்லை. இந்த ஏழு வகை தர வரிசையால், கல்வி நிறுவனங்களின் அந்தஸ்து, ஓரளவுக்கு சரியாக பிரிக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.