Pages

Thursday, August 18, 2016

கட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு

கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர்.
இதனால், தமிழகத்தில் இந்த சட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடமிருந்து முழுமையாக பெற முடியவில்லை. இதன்படி, 2014 - 15 மற்றும் 2015 - 16ம் நிதி ஆண்டுகளில், 2,179 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியுடன், தமிழக அரசு, 1,019 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து, இதுவரை இலவச கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கி உள்ளது. எனவே, வருங்காலத்தில், மத்திய அரசு நிதியை முழுமையாக பெறும் வகையில், கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.