உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன; இதற்கான கலந்தாய்வு, ஜூலை, 26ம் தேதி நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வெளி மாநில டாக்டர்களும் முதல் முறையாக பங்கேற்றனர்;
இதில், 155 இடங்கள் நிரம்பின. இதில், எம்.சி.எச்., படிப்பில், 30; டி.எம்., படிப்பில், நான்கு இடங்களும் மீதம் உள்ளன. இதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, மருத்துவக் கல்வி இயக்கத்தின், மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்தில், நாளை நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.